ஹலோ விகடன்....

கலங்காதிரு மனமே!

நல்ல மாமியார்... அன்பு மருமகள்!

‘ஒரு பெண் நினைத்தால், எந்தப் பிரச்னையையும் சுமுகமாகக் கொண்டுபோக முடியும் எனும்போது, இந்த இரண்டு பெண்களும் மனது வைத்தால், மாமியார் - மருமகள் உறவை இனிக்க இனிக்க வளர்க்கலாம்!’’

- என்று அழுத்தமாகச் சொல்லும், குடும்ப உறவுகள் மற்றும் குழந்தைகளுக்கான உளவியல் ஆலோசகர் வசந்தி பாபு, மாமியார் - மருமகளுக்கு இடையில் இணக்கமான உறவு மலர ஆலோசனைகளை வழங்குகிறார்.

‘‘பொதுவாக, ஒரு மாமியார் பாசம் காட்ட ஆரம்பித்தால், மருமகளும் தானாகவே மரியாதை கொடுக்க ஆரம்பித்துவிடுவார். குடும்பத்தின் சிக்கல்களைச் சீர்படுத்தும் அனுபவமும் ‘கீ ரோலும்’ மாமியாரிடம்தான் இருக்கிறது. அதேபோல, மருமகள் வெளியே சென்று வரும்போது, ‘அத்தை... இந்த நாவல் உங்களுக்குப் பிடிக்கும்னு வாங்கினேன்’, ‘நல்ல சிவப்புக் கொய்யா இருந்துச்சு... நீங்க பிரியமா சாப்பிடுவீங்களே!’ என்று சின்னச் சின்ன விஷயங்களில் பிரியத்தை வெளிப்படுத்தினால், மாமியார் மனம் குளிர்ந்து போவார். மரியாதையைவிட அன்பை எதிர்பார்க்கிறவர்கள் அவர்கள்.

இதில் கணவனுக்கும் முக்கியப் பங்குண்டு. இருவரிடமும் பேலன்ஸ்டாக நடந்துகொள்ள வேண்டும். உணர்ச்சிபூர்வமாக செயல்படுவதைவிட, அறிவுபூர்வமாக யோசித்துச் செய்தால் ரொம்ப சுலபம்.

‘மாமியார் வில்லி; மருமகள் கெட்டவ’ என்பது மாயை! நிறைய வீடுகள்ல மாமியார் - மருமகள், அம்மா - பெண் போல பாசமாக இருக்கிறார்கள். உங்கள் வீடும் அப்படி ஆகலாம்... அந்த இரண்டு பெண்களும் மனது வைத்தால்!'' என்ற வசந்தி பாபு,

திருமணமாகப் போகும் பெண்ணுக்கு பெற்றோர் முக்கியமாக சொல்லி அனுப்ப வேண்டியது என்ன?

குடும்பத்தில் மாமியாரின் ‘கீ ரோல்’ எந்தளவு முக்கியமானது?

நாலு பேர் வாய்க்கு அவலாக இல்லாமல் நம் குடும்பப் பிரச்னையைத் தீர்க்க என்ன செய்யவேண்டும்?’’
 
- இப்படி கேள்விகளையும் அடுக்கினார். இந்தக் கேள்விகளுக்கான பதில்களை ‘கலங்காதிரு மனமே’ மூலம் ஆலோசனைகளாக குரல்வழியில் வழங்கப்போகிறார் வசந்தி பாபு.

ஆகஸ்ட் 4 முதல் 10 வரை 044 - 66802912* என்ற எண்ணை டயல் செய்யுங்கள்.

மித்ரா,  படம்: சொ.பாலசுப்ரமணியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick