ஹலோ விகடன்....

கலங்காதிரு மனமே!

வாழ்க்கையில் நாம் சிந்திக்க மறந்த விஷயங்கள், சிந்தித்துக்கொண்டே இருக்கும் விஷயங்களைப் பற்றி, எளிமையான, சிநேகமான வார்த்தைகளில் பேசுகிறார், ஊடகவியலாளர் இ.மாலா... 

‘‘அவள் விகடன் வாசகிகளுக்கு என் வணக்கம்!

நம் நாட்டில் நிறத்தை அழகுடன் தொடர்புபடுத்தி, மாநிறமானவர்களின் தன்னம்பிக்கையை கீழிறக்குகிறார்கள். மேலும் அவர்களைக் குறிவைத்து ‘ஃபேர்னெஸ் க்ரீம்’ சந்தையை விரிவுபடுத்த நினைக்கிறார்கள். மற்ற நாடுகளைவிட இந்தியாதான் அவர்களின் முதன்மை இலக்காக இருக்கிறது. இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

வாழ்வை ரசிக்க, முதலில் கண் பார்வையின் ஆரோக்கியம் முக்கியம். அப்படியென்றால், பார்வையில்லாதவர்களுக்கு வாழ்க்கை இல்லையா? வாழ்க்கைப் பார்வை பற்றிச் சொல்கிறேன்.

சுனித்தி சாலமன்... இந்தியாவில் ஹெச்.ஐ.வி வைரஸ் பாதிப்பை முதலில் கண்டுபிடித்து உலகுக்குச் சொன்ன தமிழ்ப்பெண். சில தினங்களுக்கு முன் மறைந்த அவரைப் பற்றி, ஆச்சர்யப்படத்தக்க தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

மதுஒழிப்புப் போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. அது சாத்தியமா? நம்மால் அதில் எந்த வகையில் பங்களிக்க முடியும்? இந்தப் போராட்டத்துக்கு என்னதான் முடிவு?

‘என்னடா வாழ்க்கை இது’ என்று நொந்துபோகிறவர்களுக்கு, ஒரு சின்னக் கதை சொல்கிறேன்.

இன்றைய பெற்றோர்களுக்கான பெரிய சவால், பருவப் பிள்ளைகளை ஒழுக்கத்துடன் வளர்ப்பதுதான். அவர்களுடன் சுமுக உறவை ஏற்படுத்திக்கொண்டால் யாவும் நலமே! அதற்கு எப்படி நம்மைத் தயார் செய்துகொள்வது?

‘கனவு காணுங்கள்’ என்று சொன்ன அப்துல் கலாம் அய்யாவின் ஒரு பெரிய கனவு பற்றி அறிவீர்களா?

- இப்படி பல விஷயங்களை நான் வைத்திருக்கிறேன்... ‘கலங்காதிரு மனமே’ குரல்வழியில் உங்களுடன் பேச! ஆகஸ்ட் 18 முதல் 24 வரை  044 - 66802912* என்ற எண்ணை டயல் பண்ணுங்க!’’

கே.அபிநயா படம்: சொ.பாலசுப்ரமணியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick