மாடர்ன் ஏஞ்சலாக மாற்றும் 'கேஷுவல் காலேஜ் வேர்' டிரெஸ்!

`இன்னிக்கு என்ன டிரெஸ் போடலாம்?’ - இதுதான் காலேஜ் பொண்ணுங்களோட டாப் ஒன் பிரச்னை! அதுவும் ரெடிமேட் டிரெஸ் அவுட் ஆஃப் ஃபேஷன். டிசைனர் டிரெஸ்தான் இப்போதைய டிரெண்டு. `ஆனா, எல்லாரும் டிசைனர் டிரெஸ் வாங்குறது சாத்தியமா?’ என்றால், `சாத்தியம்’ என்கிறார் சென்னையில் உள்ள ‘தி ஃபேர் லேடி’ டிசைனர் பொட்டிக்கின்  உரிமையாளர் ஷைனி.

“எல்லாரும் குர்தா போடுற மாதிரி நாமளும் ரெடிமேட் குர்தா போடாம, ரன்னிங் மெட்டீரியல்னு சொல்ற பேல் துணியில் எப்பவும் இருக்கும் காட்டன், பாலியஸ்டர் மட்டும் இல்லாம, சந்தேரி காட்டன், ப்ராஸோ லேஸ், டிஷ்யூ இதுமாதிரி வித்தியாசமான மெட்டீரியலும், உங்களுக்குப் பொருத்தமான மற்றும் டிரெண்டுல இருக்கும் கலரை செலக்ட் செய்து வாங்கிக்கோங்க.

நெக், ஸ்லீவ் மற்றும் முழு குர்தாவையும் உங்க கற்பனைக்கு ஏத்தமாதிரி நீங்களே சொந்தமா டிசைன் பிளான் பண்ணி, உங்க டெய்லர்கிட்ட கொடுத்து ஸ்டிச் செய்தாலே உங்களுக்கான டிசைனர் டிரெஸ் ரெடி” எனும்  ஷைனி, கேஷுவல் காலேஜ் வேர் டிரெஸ்ஸை எப்படி `யுனீக்’காக டிசைன் செய்வது

1. மாடல் அணிந்திருப்பது பிரின்ட்டட் ஜூட் ரா சில்க் மெட்டீரியலில், கழுத்து, கைகள் மற்றும் டாப்ஸின் கீழ்ப்பகுதிக்கு மட்டும் சிம்பிளாக, ஆனால் வெல்வெட் துணியில் பார்டர் வைத்து தைக்கப்பட்ட குர்தா. இப்போதைய டிரெண்டான பிரைட் கலர் இந்த டிரெஸ்ஸின் கூடுதல் ப்ளஸ்.

 

2. லினன் க்ரேப் மெட்டீரியலில் பல்லாஸோ பேன்ட். ஜூட் மெட்டீரியலில் டாப்ஸ் என காலேஜ் கேர்ள்ஸுக்கான லேட்டஸ்ட் ஃபேஷன் அவுட்ஃபிட், உங்களை மாடர்ன் ஏஞ்சலா ஆக்கிடும்.

3. நம்மளை கூடுதல் ஃபிட்டாக காட்டும் பிரின்டட்  க்ரேப் சில்க் மெட்டீரியலில், ரிச்சான ஜியார்ஜெட் மெட்டீரியலை வைத்து சைனீஸ் காலர் மற்றும் ஸ்லீவ், ஸ்லிட்டுக்கு பார்டர் வைத்துள்ள இந்த கேஷுவல் மற்றும் டிசைனர் லுக் குர்தா உங்க லுக்கையே டோட்டலா மாத்திடும். இதற்கு லெகின்ஸ், ஜெகின்ஸ், ஜீன்ஸ் என எதையும் மேட்ச் பண்ணிக்கலாம்.

இந்துலேகா.சி  படங்கள்: இரா.யோகேஷ்வரன்  மாடல்: சங்கீதா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick