பாட்டிகளின் நகைகள்...பேத்திகளுக்கே!

மொகப்பு, தாலி, ராக்கொடி, சின்ன ராக்கொடி, தலை பில்லா, தலை செட், காதணிகள், கழுத்தணிகள்... இதெல்லாம் நம் பாட்டிகள், கொள்ளுப்பாட்டிகள் அவர்களின் பாட்டிகள் என்று பலரும் காலகாலமாக அணிந்து வந்த நகைகள். இத்தகைய நகைகளுக்கு இப்போது மவுசு கூட்டி வருகிறது... சென்னையின் என்.ஏ.சி ஜுவல்லரி புதிதாக திறந்திருக்கும் ‘ரீவைண்ட் கலெக்‌ஷன்ஸ்’ விற்பனைப் பிரிவு!

திரைப்பட நடிகையும், இந்த நிறுவனத்தின் பிராண்ட் தூதருமான நடிகை த்ரிஷா சமீபத்தில் தொடங்கி வைத்த இந்த ‘ரீவைண்ட் கலெக்‌ஷன்ஸ்’ பிரிவு பற்றி பேசிய இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அனந்த பத்மநாபன், ‘‘இதற்கான எங்களின் தேடல், 30 வருடங்களுக்கு முன் தொடங்கியது. எந்த ஒரு பழைய பொருளின் பின்னணியிலும் ஏராளமான வரலாறுகளும், உணர்வுகளும், பந்தங்களும் அடங்கியிருக்கும். அதேபோன்றுதான் இந்த பழைய நகைகளின் பின்னால் நம் முன்னோர்களின் வாழ்க்கை முறைகளும், பெருமைகளும் உள்ளன.

இந்த ஆபரணங்களில் பெரும்பாலானவை பர்மாவின் சுரங்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட மாணிக்கங்களிலிருந்து நாகர்கோவில், காரைக்குடி, மைசூர் பகுதிகளைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த பொற்கொல்லர்களால் படைக்கப்பட்டவை. இவற்றின் விலை ஐம்பது ஆயிரத்தில் தொடங்கி கோடிகள் வரை உள்ளது.

இவற்றைச் சேகரிப்பதற்காக நிறைய பயணப்பட வேண்டும். நிறைய ஆய்வில் ஈடுபட வேண்டும். அதையெல்லாம் தாண்டி அந்த பழமை மீது ஆர்வம்கொள்ள வேண்டும். என்னுடைய அப்பா இப்படி காட்டிய ஆர்வத்தினால்தான் இது இன்று சாத்தியப்பட்டுள்ளது. ஆம், நாட்டின் பல இடங்களுக்கும் இதற்காகப் பயணப்பட்டு, வெவ்வேறு மக்களைச் சந்தித்து இந்த ஆபரணங்களை சேகரித்து வந்துள்ளோம்’’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட அனந்த பத்மநாபன்,

“புராதன நகைள் இன்று இளம்பெண்கள் விரும்பி அணியுமளவுக்கு ஃபேஷனாகிவிட்டது. பாட்டிகள் பயன்படுத்திய இத்தகைய பல ஆபரணங்களை இன்று இளம்பெண்கள் விரும்பி அணியும் அளவுக்கு அவற்றின் பழம்பெருமை மாறாமலும் கொண்டு வந்திருக்கிறோம். அடுத்தபடியாக ஆண்களுக்கான பழம்பெரும் ஆபரணங்களையும் அறிமுகப்படுத்த உள்ளோம்!’’ என்றார் சிரித்தபடியே!

கு.முத்துராஜா  படங்கள்: பா.அருண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick