வழிகாட்டும் ஒலி!

"தொழில் கடன்... கஷ்டமில்லை!”

வீட்டிலிருக்கும் பெண்களும் தொழில்முனைவோர் ஆகலாம் என்ற நல்முயற்சிக்காக, அவர்களுக்குத் தொழில்கடன் வழங்குவது மட்டுமின்றி, அந்தப் பெண்களுக்கு நம்பிக்கை அளிப்பது, தொழிலுக்கான பயிற்சி, தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்த உதவி, சேமிப்புக்கு வழி என்று செயலாற்றி வருகிறது, சென்னையில் உள்ள ‘வரம் கேப்பிடல்’ நிறுவனம். அதன் மேனேஜிங் டைரக்டர் லதா பாண்டியராஜன், திருநெல்வேலியை பிறப்பிடமாகக் கொண்டவர். வடஇந்தியாவில் சி.ஏ. முடித்தவர். அவரிடம் பேசியதில் இருந்து...

“கடந்த 15 வருடங்களாகச் சிறுதொழில் கடன் வழங்கிவருகிறோம். முதலில் தமிழ்நாடு மகளிர் திட்டத்தின் கீழ் பல பெண்களுக்கு கடன் வாங்கிக் கொடுத்துள்ளோம். ஆனால், கடந்த மூன்று வருடங்களாக ‘வரம் கேப்பிடல்’ மூலமாக நாங்களே கடன் வழங்கி வருகிறோம். தொழில் தொடங்கும் முன்பு, ஒரு வார காலம் அந்தத் தொழில் ரீதியான பயிற்சி, வாங்கும் கடனை எப்படி திருப்பிச் செலுத்துவது, எப்படி சந்தைப்படுத்துவது என அனைத்து விஷயங்களையும் கற்றுத்தருகிறோம். தொழில் தொடங்கிய பின்பும், தொழில் ரீதியான அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பூ வியாபாரம், காய்கறி வியாபாரம், மீன் விற்பனை போன்ற சிறு தொழில் முதல் அழகு நிலையம், சணல் பை தயாரிப்பு, கேன்டீன், ஃபேஷன் நகை விற்பனை, மொத்த விலை கடையிலிருந்து பொருட்கள் வாங்கி சில்லறை வியாபாரம் செய்வது என இப்படி பல தொழில்களைப் பெண்கள் வெற்றிகரமாகச் செய்துவருகிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்