ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

”காதல் ஃபாஸ்ட் ஃபுட் அல்ல!பொன்.விமலா

'டார்லிங் டார்லிங்’ படத்தில் அரும்பான காதல், அதிகாலைப் பூ போல இன்றும் புதிதாக உள்ளது! கிட்டத்தட்ட 31 ஆண்டுகளாக வெற்றித் தம்பதிகளாக வாழ்ந்து காட்டுகிறார்கள், பூர்ணிமா  பாக்கியராஜ்!

''இது காதலர் தின ஸ்பெஷல் 'கலங்காதிரு மனமே’ என்பதால், கொஞ்சம், நிறைய காதல் பேசுவோம்!''  வழக்கமான சிநேகப் புன்னகை தந்த பூர்ணிமா, காதலின் பலம் பற்றி, பெண்கள் தங்களை குடும்ப உறவுக்குள் இணைத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு பற்றி, இன்னும் சில சிந்தனைகள் பற்றிப் பேசினார்...

இன்றைய பிள்ளைகளின் காதலைப் பற்றிக் கவலைப்படுவதைவிட, அவங்களோட 'பிரேக்அப்’ பற்றித்தான் அதிகம் கவலைப்பட வேண்டியிருக்கு. எடுத்ததும் 'ஐ லவ் யூ’, சின்ன சண்டை வந்ததும் 'டாட்டா’... இப்படித்தான் ஆயிடுச்சு இப்போ லவ். காதல் ஃபாஸ்ட் ஃபுட் இல்லை. இந்த அவசரகதி காதல் கொடுக்கும் சுமை என்ன தெரியுமா?

ஒரு விஷயத்தை வெளிப்படையா சொன்னா அது ஏற்படுத்தும் விளைவுகளை யோசிச்சுதான், பெண்கள் பல விஷயங்களை ரகசியம் ஆக்கிடுறாங்க. அதேசமயம், ஒரு விஷயத்தை சொல்ற தால நாலு பேருக்கு நன்மைனா, அதை சொல்லித்தானே ஆகணும்! ரகசியம் விஷயத்தில் தப்பு எது, சரி எதுனு எனக்குத் தெரிஞ்சதை சொல்றேன்!

கிரெடிட் கார்டை கையோட வெச்சுக்கிட்டு கடனாளி ஆகுறது சரிதானா? அசட்டையா செலவழிக்காம இருந்தாலே, அது சேமிப்புதான். எப்ப, எப்படி ஷாப்பிங் பண்ணலாம்னு நான் உங்களுக்குச் சொல்லவா!

குடும்பத்தோட டூர் போறதுன்னா, வெளிநாடோ, வெளியூரோதான் போகணும்கிறது இல்ல. ஒருநாள் ஒருவேளை உணவுக்கு குடும்பத்தில் எல்லோரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட்டா, அதுவும் ஒரு டூர்தான். எப்படின்னு நான் சொல்றேன் வாங்க!

பெண்களோட உடை எப்படி இருக்கணும்? அட்ராக்டிவ்வா இருக்குறதைவிட, அவங்க மேல மரியாதை ஏற்படுத்தும் விதமா இருக்கணும்னு சொல்வேன். அதைப் பத்தி இன்னும் கொஞ்சம் பேசுவோம்!

ஓய்வு நேரத்தை எப்படி பயனுள்ளதா மாத்திக்கலாம்? அம்மாக்கள் பிள்ளை களுக்கு என்னவெல்லாம் செய்யணும்? சமூகவலைதளங்களைப் பெண்கள் எப்படிக் கையாளணும்? ஒரு பெண் ஒருநாள் மனசுவிட்டுப் பேசினா, என்னவெல்லாம் பேசுவாள்?

- இப்படி உங்ககிட்ட பேச நிறைய விஷயங்கள் இருக்கு எனக்கு. போன் போடுங்க... கேட்டுக்கோங்க!

அன்புடன்,

பூர்ணிமா பாக்கியராஜ்

பிப்ரவரி 10 முதல் 23 வரை

தினமும் மூன்று நிமிடங்களை ஒதுக்குங்கள்...

044 - 66802932 இந்த எண்ணுக்கு ஒரு போன் போடுங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick