மஹாலக்ஷ்மி கடாக்ஷம்

வேளுக்குடி கிருஷ்ணன், ஓவியம்: சங்கர்லீ

தாயார் தன்னுடைய நீண்ட, அழகிய இரு திருவிழிகளால் பெருமாளைப் பார்க்கும்போது அவளுடைய கண்களில் காணப்படும் கருமை நிறமானது, பகவானின் திருமேனியைக் கருமை நிறம் உடையதாகச் செய்துவிடுகிறது. அதேபோல், பெருமாள் தன்னுடைய செவ்வரி ஓடிய திருக்கண்களால் தாயாரைப் பார்க்கும்போது, தாயாரின் திருமேனி செம்மை நிறம் கொண்டதாக மாறிவிடுகிறது.

தாயாரின் கண்கள் ஏன் கறுப்பாகவும், பெருமாளின் கண்கள் ஏன் சிவந்தும் இருக்க வேண்டும் என்று நமக்குக் கேட்கத் தோன்றினால், அதற்கும் ஓர் அழகிய விளக்கத்தைச் சொல்லலாம். அதாவது, பெருமாளின் கரிய திருமேனியைத் தயார் பார்த்துக்கொண்டே இருந்தபடியால், அந்தக் கரிய நிறம் தாயாரின் கண்களில் படிந்துவிட்டது; பெருமாள் தன் செவ்வரியோடிய கண்களால் தாயாரின் அழகிய திருமேனியைப் பார்த்துக்கொண்டே இருந்தபடியால், அவருடைய கண்களின் செம்மை நிறம் தாயாரின் திருமேனியில் செந்நிறமாகப் படிந்துவிட்டது. அப்படி கேட்டால் அப்படி சொல்லுவது, இப்படி கேட்டால் இப்படி சொல்லுவது. ஆக, இருவருமே ஒருவரை ஒருவர் அந்த அளவுக்கு அந்நியோன்னியமாகப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்