ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

உறவுகளுக்குள் விரிசல்கள்... ஒட்டுவது எப்படி?! சா.வடிவரசு   படம்: தே.தீட்ஷித்

 'ஆல் இஸ் வெல்’ தொடர் மூலமாக வாசகிகளின் நெஞ்சங்களில் இடம்பிடித்துள்ள மருத்துவர் அபிலாஷா, 'கலங்காதிரு மனமே’ பகுதியில் உறவுகளுக்குள் ஏற்படும் விரிசல்கள் பற்றிப் பேசினால் பயனுள்ளதாக இருக்கும் என்று, வாசகிகள் பலரும் பகிர்ந்தார்கள். இதை அபிலாஷாவிடம் நாம் தெரிவிக்க, ''பேசப்பட வேண்டிய விஷயம்தான்!'' என்றவர், தொடர்ந்தார்.

''5 வயது சிறுமி வேலைக்குச் சென்றுவந்த தன் அம்மாவிடம் கேட்டாள்...

'ஏம்மா நம்ம வீட்டு பீரோ சாவியை ஆயாகிட்ட கொடுத்துட்டுப் போகல?’

'அதைப் போய் ஆயாகிட்ட கொடுப்பாங்களா?’

'ஏம்மா நம்ம பீரோவுல இருக்குற நகை, பணத்தை எல்லாம் ஆயாகிட்ட கொடுத்துட்டுப் போகல?’

'ஷ்ஷு... அதையெல்லாம் ஆயாகிட்ட கொடுக்கக் கூடாது.’

'ஏம்மா உங்க ஏ.டி.எம் கார்டை ஆயாகிட்ட கொடுத்துட்டுப் போகல?’

'என்ன கேள்வி இது. நீ சொல்றதெல்லாம் ரொம்ப முக்கியமான பொருள். அதை ஆயாகிட்ட எல்லாம் கொடுக்கக் கூடாது!’

'அப்போ ஏம்மா என்னை மட்டும் ஆயாகிட்ட விட்டுட்டுப் போற?  உனக்கும் அப்பாவுக்கும் நான் முக்கியம் இல்லையா?’

இம்முறை அம்மாவிடம் பதில் இல்லை. கண்களில் நீர் மட்டுமே இருந்தது!

கொஞ்சம் சிந்தியுங்கள்... வாழ்க்கைக்குப் பணமா, பணமே வாழ்க்கையா..?!'' என்ற கேள்வியை அழுத்தமாக எழுப்பும் அபிலாஷா, அவள் விகடன் குரல் ஒலி வழியாக...

1. உறவுகளுக்குள் விரிசல் விழாமலிருக்க கடைப்பிடிக்க வேண்டியவை என்னென்ன?

2. 'வேகமா கேளுங்க... மெதுவா சொல்லுங்க...’  இது எவ்வளவு பெரிய சூத்திரம் தெரியுமா?  

3. சாப்பாட்டுக்கு எப்படி உப்போ, அது போல திருமணத்துக்கு முக்கியம் எது?

4. காலம் காலமாக தொடரும் மாமியார்  மருமகள் பிரச்னைக்கு ஆரம்பப் புள்ளி எது?

இப்படி இல்லறத்தை நல்லறமாக்கும் வித்தையைக் கற்றுத் தரும் பல விஷயங்களோடு காத்திருக்கிறார்.

கேளுங்கள்... கொண்டாடுங்கள் ஹேப்பி ஃபேமிலியை!  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick