ஹலோ விகடன்....

கலங்காதிரு மனமே!

லப்படம் முதல் விலை வரை... இனியும் நாம் ஏமாற வேண்டுமா?

‘‘நா ம் வாங்கும் பொருட்களில், கலப்படம் தொடங்கி விலை வரை தினம் தினம் ஏமாற்றப்படுகிறோம். இதற்கு, ஏமாற்றுபவர்களைவிட, ஏமாறும் நாம்தான் அதிக பொறுப்பேற்க வேண்டும்!’’ - உண்மையை உணர்த்திப் பேசுகிறார், ‘கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா’ அமைப்பின் முன்னாள் தலைவர் தேசிகன்.

‘‘பெரும்பாலான நுகர்வோருக்கு தாங்கள் வாங்கும் பொருட்களின் தரம் மீதோ, அதற்காக தாங்கள் செலவழித்த பணத்தின் மீதோ கவனமோ, பொறுப்போ கிடையாது. இது என்ன மனநிலை என்று புரியவில்லை.

‘அஞ்சு ரூபாய் ஏமாத்திட்டானா.... சரி, அதுக்காக என்ன பண்றது?’, ‘மளிகை சாமானோட கலப்படத்தை எல்லாம் நாம என்னத்தக் கண்டோம்... கிடைக்கறதை வாங்கிக்க வேண்டியதுதான்!’ - இதுதான் பலரின் கொள்கை (!). சிலர் தட்டிக்கேட்டாலும், அவர்களை ஏதோ ‘அம்பி’ போல இந்தச் சமூகம் ஒதுக்கிப் பார்ப்பது, இன்னும் கொடுமை!

சகோதரிகளே... நீங்கள் மளிகை, காய் வாங்கும் கடைகளில், பொருட்களின் எடை, தரம் குறைந்தோ, காலாவதி தேதி முடிந்தோ விற்கப்பட்டால், உடனே அந்தக் கடைக்காரரிடம் அந்தத் தவற்றைச் சுட்டிக்காட்டி நியாயம் கேளுங்கள். அக்கம்பக்கத்தினர் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் பின்வாங்காதீர்கள். முன்பைவிட இன்னும் உறுதியாக, தீர்க்கமாக, ‘நுகர்வோர் அமைப்பில் புகார் கொடுப்பேன்’ என்று தைரியமாகச் சொல்லுங்கள். செயல்படுத்தியும் காட்டுங்கள்’’ என்று அழுத்தம் கொடுக்கிறார் தேசிகன்.

காசு கொடுத்து பொருட்களை வாங்கும் நீங்கள் யார்... உங்களது கடமையும், உரிமையும் என்னென்ன?

ஒரு பொருளை வாங்கும்போது அதை எப்படித் தேர்வு செய்ய வேண்டும்? அதில் கலப்படம் தொடங்கி, விலை வரை முறைகேடுகள் இருப்பின் உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன?

புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனில் என்ன செய்வது?

இனி, ஒரு நுகர்வோராக நீங்கள் ஏமாற்றப் படாமல் இருக்க செய்ய வேண்டிய மூன்று விஷயங்கள் என்ன?

`நுகர்வோரின் எமன்’ என்பவன் யார்?

- இப்படி பல விஷயங்களைச் சொல்லி நம்மை ஏமாற்றுக் கடலில் இருந்து மீட்க, ‘கலங்காதிரு மனமே’ குரல் வழியில் பேசுகிறார் தேசிகன். ஜூலை 7 முதல் 13 வரை 044-66802912* என்ற எண்ணில் அழையுங்கள்!

சா.வடிவரசு  படம்: கே.ராஜசேகரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick