ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு... விளம்பரங்களும், நிதர்சனமும்!

`படிக்கும்போதே பல ஆயிரம் சம்பளம்...'

ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பில், படிக்கும்போதே பல ஆயிரம் ரூபாய் சம்பளம், படிப்பை முடித்த உடன் வெளிநாட்டில் வேலை என வசீகரமான விளம்பரங்கள் மாணவர்களை ஈர்க்கத் துவங்கியுள்ளன. இந்நிலையில் இந்தப் படிப்பின் உண்மை இயல்புகளை, வேலைவாய்ப்பு நிதர்சனங்களைப் பற்றிச் சொன்னார், கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியின் கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை உதவிப் பேராசிரியர் சதீஷ்.

“கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் என்பது ஒரு புரொஃபஷனல் கோர்ஸ். 12-ம் வகுப்பில் தேர்வானவர்கள், இதில் சேர முடியும். பி.எஸ்ஸி., கேட்டரிங் சயின்ஸ் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் எனும் பெயரிலான இந்தப் படிப்பு, மூன்று ஆண்டு காலப் படிப்பு. இதில் 6 மாதம் நட்சத்திர ஹோட்டல்களிலும் பயிற்சி அளிக்கப்படும். இந்திய அளவில் கேட்டரிங் துறைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. வெளிநாடு, உள்நாட்டில் வேலை வாய்ப்புகளும் அதிகரித்த வண் ணம் உள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்