ஹேர் கலரிங் செய்கிறீர்களா?!

ஹேர் கலரிங்... சிறுசு முதல் பெருசு வரை இதுதான் பேச்சாக இருக்கிறது. இந்த கலரிங் பற்றி இங்கே கொஞ்சம் தொட்டுக்காட்டுகிறார், சென்னை நேச்சுரல்ஸ் பியூட்டி சலூனின் நிர்வாகி வீணா குமாரவேல்.

‘‘ஹேர் கலரிங்கில்... க்ரே கலரிங், ஃபேஷன் கலரிங்,  பிளீச்சிங் செய்து கலரிங் செய்வது, பிளீச்சிங் செய்யாமல் கலரிங் செய்வது என்று பல வகைகள் உண்டு.  முடிக்கு பிளீச்சிங் செய்வதால் முடியில் உள்ள கறுப்பு பிக்மென்ட் மாற்றப்பட்டு அதன்பிறகு, நாம் விரும்பிய வண்ணம், ஆடை, அலங்காரத்துக்கு ஏற்ப கலரிங் செய்யப்படுகிறது. இது பளிச்சென இருக்கும். ஃபேஷன் கலரிங், பிளீச்சிங் செய்த பின்னரே செய்யப்படும்.
 
பிளீச்சிங் செய்யாமல், நேரடியாக கறுப்பு முடியின் மீது கலரிங் செய்யும்போது அது நீண்ட நாள் நீடிக்கும்.

க்ரே கவரேஜ்/கலரிங் நரைமுடியை கறுப்பாக மாற்றுவதற்காகச் செய்யப்படுவது. இதை ஒவ்வொரு மாதமும் செய்துகொள்ள வேண்டும். டெம்ப்ரவரி கலரிங்கில், கேசத்தின் ஒரு பகுதி மட்டும் கலர் செய்யப்படும்.  14 முதல் 15 வாஷ் வரை இந்த கலரிங் நீடிக்கும்.

ஒரு மாதம், ஆறு மாதங்கள், பெர்மனன்ட் கலரிங் என, கலரிங் எவ்வளவு நாள் நீடிக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். கலரிங் செய்த பின், நிபுணரின் ஆலோசனைக்கு ஏற்ப ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும்.

குறைந்தது 800 ரூபாயில் இருந்து 5,000 வரை ஹேர் கலரிங் செய்யப்படுகிறது!’’

கேசத்தை மாற்றலாம் கலர் கலராக!

எஸ்.சங்கரீஸ்வரி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick