ஹலோ விகடன்....

கலங்காதிரு மனமே!

குற்றங்களுக்குக் காரணம், பெண்களின் உடையா?

பிரபல வழக்கறிஞர் அருள்மொழி, பல சமூகக் கேள்விகளோடு காத்திருக்கிறார் வாசகிகளுடன் பேச!

``சில செய்திகள் பரபரப்பாக்கப்படுவது, தொடர்ந்து அதைப் பற்றியே பேசுவது, விவாதிப்பது என்று இருப்பது, இதன் நடு வில் கவனத்துக்கு வர வேண்டிய சில முக்கியச் செய்திகள் அமுங்கிவிடுவது... இவற்றின் மூலக் காரணம் என்ன?

சமீபத்தில் ஏற்பட்ட ஒரு ஊர்க்கலவரத்துக்கு, ஒரு பெண்தான் காரணம் என்ற கருத்துகளும், விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. இது சரியா, தவறா?

இந்த சமூகத்துக்கு எச்சரிக்கை உணர்வு இல்லாமல் இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன?

இன்றைய நவநாகரிக பெற்றோர்களின் பொறுப்பற்றதனம், குழந்தைகளை எப்படியெல்லாம் பாதிக்கிறது? குழந்தைக் குற்றவாளிகள் பெருகி வருவதற்கு என்ன காரணம்?

காலங்காலமாக பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை களுக்கு அவர்களின் உடைதான் காரணம் என்று சொல்லப் பட்டு வருகிறது. அதன் பின்னணி என்ன?

பொருளாதாரச் சுதந்திரம் கிடைத்துவிட்டால் வாழ்க்கை வசப்பட்டுவிடும் என்று நினைத்துப் பணிக்குச் செல்லும் பெண்கள் எல்லாம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்களா?

நாம் எத்தகைய சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்தும் விதமாக, சில பிரச்னைகளை முன் வைத்து விவாதம் நடத்தப்படுகிறது. சமூகம் குறித்த ஒவ்வொருவரின் பார்வையும் ஆரோக்கியமானதாக இருக்கிறதா?

- இப்படி சமூகம் சார்ந்து நம் மனதில் அடிக்கடி எழும் கேள்விகளை, நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? பிரச்னைகளின் வேர்க்காரணங்களை எப்படி அறிவது? இப்படி பல விஷயங்களை உங்களோடு பேசவிருக்கிறேன்!’’ என்று சொல்லும் அருள்மொழி இன்னும் விரிவாகப் பேசுகிறார், ‘கலங்காதிரு மனமே’ குரல் வழியில்!

ஜூலை 21 முதல் 27 வரை 044 - 66802912* என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுங்கள்!

ந.ஆஷிகா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick