கபம் போக்கும் கத்திரிப்பிஞ்சு!

த்திரிக்காய் என்றதும் சிலர் முகம் சுளிப்பார்கள். ஆனால், அந்த கத்திரிக்காய்க்கு உள்ள மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்தால் முகம் மலர்வார்கள். அந்த அளவுக்கு வல்லமை பெற்றது கத்திரிக்காய். சுண்ணாம்புச்சத்து, கந்தகச்சத்து மற்றும் வைட்டமின்-ஏ போன்றவை நிறைந்த கத்திரிக்காய் நீரிழிவு நோயாளிக்கு ஏற்ற உணவுப்பொருளாகும். கத்திரிக்காய்களில் பிஞ்சுக் கத்திரிக்காய்தான் பெரும்பாலும் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. இது பித்தத்தைத் தணிப்பதோடு காய்ச்சல், வாயுத்தொல்லை போன்றவற்றை குணப்படுத்தக்கூடியது. மேலும் நெஞ்சில் கபம் (சளி) கட்டிக்கொண்டால் பிஞ்சுக் கத்திரிக்காயை தினசரி சமையலில் சேர்த்துக்கொள்வதன் மூலம் கைமேல் பலன் கிடைக்கும். மலச்சிக்கல் உள்ளவர்கள் கத்திரிப்பிஞ்சுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து, வாரம் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். அம்மை நோய் பரவும் காலங்களில் முற்றிய கத்திரிக்காயை தீயில் சுட்டு காய்ந்தமிளகாய், சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிட்டால், நோய் தாக்காமல் தடுக்கும். சிரங்கு, புண், ரணம் உள்ளவர்கள் கத்திரிக்காயை அதிகமாக சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்