பெண்களின் பாதுகாப்பு... இனி விரல்நுனியில்!

ந்த ஆப்ஸ் யுகத்தில், பெண்களின் பாதுகாப் புக்கான ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் ‘மித்ரா'-வை (MITRA - Mobile Initiated Tracking and Rescue Application)’ கண்டுபிடித்துள்ளார், புதுவை பல்கலைக்கழகத்தின் கணினித்துறை இணைப்பேராசிரியர் சிவசத்யா.

‘‘ ‘மித்ரா’வின் சிறப்பம்சம், எளிமைதான். ஒரு மெசேஜ் அனுப்பும் செலவில் இதை இயக்கலாம். இந்த அப்ளிகேஷனை இலவசமாக டவுன்லோட் செய்து, அதில் நம் பெயர் மற்றும் பாஸ்வேர்டை பதிவு (register) செய்துகொண்டு, பின்னர் அதில் யாராவது மூவரின் செல்போன் நம்பரை பதிவு செய்துகொள்ளலாம். இந்த நம்பர்களை மாற்றிக்கொள்ள வும் முடியும். இப்போதைக்கு இதில் புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலைய தொலைபேசி எண் மற்றும் மகளிர் விடுதி எண்கள் தரப்பட்டுள்ளன’’ என்ற சிவசத்யா, அதன் செயல்பாட்டை விளக்கினார்.

‘‘ஏதாவது ஆபத்துனா, மொபைல்ல இருக்கிற வால்யூம் பட்டனை ஒரு லாங் பிரஸ் பண்ணினா போதும். நாம பதிந்து வைத்திருக்கிற அந்த மூன்று எண்களுக்கும்
`I AM IN DANGER, PLS HELP ME' என்ற மெசேஜ் போயிடும். அதுமட்டுமில்லாம, இதில் இருக்கும் ஜிபிஎஸ் தொழில்நுட்பம், நாம் இருக்கும் இடத்தை துல்லியமா சொல்லிடும். ஒருவேளை தவறுதலா வால்யூம் பட்டனை அழுத்திட்டாலும், ‘decline’ என்ற ஆப்ஷன் மூலமா ஒரு ‘ஸாரி’ மெசேஜ் அனுப்பிடலாம்’’ -  சபாஷ் சொல்ல வைத்த சிவசத்யா, இந்த ஆப் உருவாக்கத்தில் அவருக்கு உதவியாக இருந்த அவர் மாணவர் ஜெயராஜுக்கும், இந்த அப்ளிகேஷனை செயல்பட வைக்க ஒத்துழைப்பு தந்த காவல்துறை சிறப்பு டாஸ்க் அலுவலர் பாஸ்கரனுக்கும் நன்றி சொல்லித் தொடர்ந்தார்.

‘‘முதல் கட்டமா, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து இதை தமிழ்நாடு முழுக்க இயக்க முடிவு செய்திருக்கோம். பெண்கள் மட்டுமில்லாம, வீட்டில் தனியா இருக் கும் முதியவர்கள், இளைஞர்கள், ஆண்கள்னு ஆபத்தில் இருப்பவர்களும் இதைப் பயன்படுத்தலாம். இன்னொரு பக்கம், கல்லூரி வளாகத்தில் நடக்கும் ராகிங்கை தடுக்கும் வகையில், இதே ஆப்ஸை புதுவை பல்கலைக்கழக மாணவர்களுக்காக பிரேத்யேகமா டிசைன் செய்திருக்கேன்!’’

- உற்சாகம் சிவசத்யா குரலில்!

சு.கற்பகம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick