என் டைரி - 355

ஜோதிடம் தந்த மனநோய்!

ள்ளி நாட்களில் என் உயிர்த் தோழி ஒருத்தி, விஷக்காய்ச்சலில் இறந்துவிட்டாள். இறுதி மூச்சு நின்றபோது, தோழியின் அருகிலேயே இருந்த எனக்கு அந்த அதிர்ச்சி விலகவேயில்லை. எங்கள் வீட்டில் ஜாதகம், ஜோதிடம் போன்றவற்றை அதிகம் நம்புவார்கள் என்பதால், எனக்கும் அதில் கேள்விகளற்ற நம்பிக்கை இருந்தது. இந்நிலையில், என் தோழி இறந்த இரண்டு வாரங்களில் எங்கள் வீட்டுக்கு வந்த ஜோதிடர் ஒருவர், எனக்கு ஜாதகம் சரியில்லை என்றும், என்னைத் துரத்திய சாவு, உடன் இருந்த ஓர் உயிரைப் பறித்துச் சென்றுவிட்டதாகவும் கூற, அப்படியெனில் என் சாவைத்தான் என் தோழிக்குக் கொடுத்துவிட்டேனா என்று என்னைக் குற்ற உணர்ச்சி கொன்றது. போதாக்குறைக்கு, ‘ஜாதகப்படி இவருடன் இருப்பவர்களுக்கு கண்டம் இருக்கிறது. சில நாட்களுக்கு இவர் குடும்பத்தைப் பிரிந்திருக்க வேண்டும்’ என்றும் அவர் சொல்ல, ஹாஸ்டலில் சேர்க்கப்பட்டேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்