வாதம் போக்கும் வாதநாராயணன்!

வாதநாராயணன்.... இதற்கு ஆதிநாராயணன், வாதமடக்கி, வாதரக்காட்சி, வாதரசு, தழுதாழை என பல பெயர்கள் உண்டு. வாத நோய்களை விரட்டுவதில் வாதநாராயணன் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் இலையை நல்லெண்ணெயில் வதக்கி... உளுந்து, பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, மிளகாய், உப்பு, புளி சேர்த்து துவையலாக அரைத்து வாரம் ஒருநாள் உணவோடு சேர்த்து சாப்பிட... பேதியாகும். இதனால் வாத நோய்கள் விலகும். மேலும் வேலைப்பளு, அலைச்சல் காரணமாக ஏற்படும் கை - கால் வலி, உடல் வலி சரியாகும். இதே பிரச்னைகளுக்கு வாதநாராயணன் இலைகளை நீர் விட்டு கொதிக்கவைத்து பொறுக்கும் சூட்டில் வலி உள்ள இடங்களில் ஊற்றினாலே நிவாரணம் கிடைக்கும். வாதப்பிடிப்பு, வாய்வுப்பிடிப்பு உள்ள இடங்களில் இதே நீரை ஊற்றி வந்தாலும் பிரச்னைகள் சரியாகும். வீக்கம், கட்டி ஏற்பட்டால் வாதநாராயணன் இலையுடன் விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, பொறுக்கும் சூட்டில் பூசி வந்தால் பிரச்னைகள் விலகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்