கதை எழுதலாம் வாங்க

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ரம்ப வரிகளை பிரபல எழுத்தாளர் வழங்க... இதனைக் கொண்டு வாசகிகள் கதையை எழுதி முடிக்கும் வகையிலான `கதை எழுதலாம் வாங்க' போட்டி, தொடக்கத்திலேயே டாப் கியரில் வேகம் எடுத்துவிட்டது. வாசகிகள் எழுதிக் குவித்து வரும் கதைகள்... `இத்தனை படைப்பாளிகளா!' என்ற பிரமிப்பையும், `என்ன ஓர் அற்புதமான நடை!' என்ற ஆச்சர்யத்தையும் ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன.

முதல் இரண்டு போட்டிகளுக்கு நீங்கள் அளித்த ஏகோபித்த வரவேற்பைத் தொடர்ந்து, மூன்றாவது போட்டிக்காக எழுத்தாளர் அழகிய பெரியவன் வழங்கும் ஆரம்ப வரிகள் இங்கே இடம்பெறுகின்றன. இதை முழுமை செய்யும் கதைகளை எழுதி அனுப்புங்கள். கதை, அவள் விகடன் இதழில் ஒரு பக்கம் அளவு வரும் வகையில் இருக்க வேண்டும் (200 வார்த்தைகளுக்கு மிகாமல், ஏ4 தாளில் இரண்டு பக்கம் அளவில் இருக்கலாம்). ஆரம்ப வரிகளை எழுதிய எழுத்தாளரே பரிசுக்குரிய கதையைத் தேர்ந்தெடுப்பார். முதல் பரிசுக்குரிய கதை அவள் விகடன் இதழில் இடம்பெறும். அடுத்த பரிசு பெறும் கதை www.vikatan.com-ன் அவள் விகடன் பக்கத்தில் இடம்பிடிக்கும்.
கற்பனை சிறகை விரியுங்கள்... காத்திருக்கின்றன பரிசுகள்!

எழுத்தாளர் அழகிய பெரியவன் வழங்கும் ஆரம்ப வரிகள்....

வகுப்பறை நடைவழியில், இறுகிய முகத்துடன் உட்கார்ந்து விளையாட்டு மைதானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள் இளமதி. எண்ணம் முழுதும் பிற்பகல் விளையாட்டுப் போட்டிகளின் மேல் கிடந்தது. ஆனால், வீட்டிலிருந்து கிளம்பும்போதே சொல்லிவிட்டாள் அவளுடைய அம்மா கலாவதி... ``வெளையாட்டுங்க எதுலயும் கலந்துக்க வேணாம். படிச்சிட்டு வந்தா போதும். மீறி கலந்துக்கிட்டேனு தெரிஞ்சது, ஓங்கையி காலை முறிச்சிடுவேன்...”

அழகிய பெரியவனின் ஆரம்ப வரிகளுக்கான உங்களின் சிறுகதை வந்து சேர வேண்டிய கடைசி நாள்: ஜூன் 10, 2015

அனுப்ப வேண்டிய முகவரி

`கதை எழுதலாம் வாங்க!'அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.aval@vikatan.com இ-மெயில் முகவரியிலும் அனுப்பலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick