கைகொடுக்கும் கிராஃப்ட்!

வேக்ஸ் பலகாரம்... கைநிறைய வருமானம்!

‘‘கடைகள், பள்ளிக்கூட, கல்லூரி நாடகங் கள் போன்றவற்றில் எல்லாம் டிஸ்பிளே ஸ்வீட் - காரங்களுக்கு ஃப்ரெஷ்ஷான    பட்சணங்களை வைப்பது சிரமம். அதற்காகத்தான் இந்த வேக்ஸ் டிஸ்பிளே பலகாரங்கள்! இவற்றை மிக எளிமையாக, செய்யலாம்... நல்ல விலைக்கு விற்கலாம்!’’ என்று தகவல் சொல்லும் சென்னை போரூரில் உள்ள ‘எஸ்.எஸ் ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட்ஸ்’ஸின் உரிமையாளர் சுதா செல்வக்குமார், வேக்ஸ்  முறுக்கு செய்முறையை விளக்குகிறார் இங்கு!

 தேவையான பொருட்கள்: பட்டன் வேக்ஸ் (பட்டன் மெழுகு) - கால் கிலோ, மெழுகு கலர் பவுடர் - சிறிது (ஆக்கர் மஞ்சள் கலர்), திரிநூல் - 2 முழம், வார்னிஷ், பிரஷ்.

செய்முறை:

படம் 1: அடுப்பைக் குறைந்த தணலில் வைத்து, அலுமினிய பாத்திரத்தில் மெழுகைப் போட்டு உருக்கிக்கொள்ளவும்.

படம் 2: மெழுகு கலர் பவுடர் (மஞ்சள்) சேர்த்துக் கிளறவும்.

படம் 3: மொத்த திரிநூலை பின்னல் போட்டு அதில் முக்கி எடுக்கவும்.

படம் 4: பிறகு, அதை உடனே வட்டமாக முறுக்கு சுற்றுவது போல வேகமாகச் செய்யவும் (அதாவது சூடு கை பொறுக்கும் அளவு இருக்கும்போதே செய்துவிடவும்).

படம் 5: அந்த சூட்டுக்கு சுற்றின முறுக்கு ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும். சூடு ஆறியதும் அதன் மீது கிளியர் வார்னிஷ் அடித்துவிடவும். இப்போது எத்தனை வருடங்கள் ஆனாலும் ஃபிரெஷ்ஷாக இருக்கும் வேக்ஸ் முறுக்கு ரெடி!

``ஆறு முறுக்கு கொண்ட ஒரு பிளேட்டை, 500 ரூபாயில் இருந்து விற்பனை செய்யலாம். இதே போல லட்டு, சமோசா, மசால் வடை என ஸ்வீட் - கார வகைகளை வேக்ஸைப் பயன்படுத்தி அழகாக செய்யலாம்!’' என்று உற்சாகம் பொங்க கூறுகிறார் சுதா.

- கிராஃப்ட் கிளாஸ் தொடரும்...

வே. கிருஷ்ணவேணி  படங்கள்: எம். உசேன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick