ஆப்ஸ் உலகில் அசத்தும் மதுரைப் பெண்கள்!

டெக்னாலஜி தளத்தில் தேசிய அளவு, ஆசிய அளவு என வென்று வந்திருக்கிறார்கள் மதுரைப் பெண்கள். இவர்களுக்கு முது கெலும்பாக இருந்து, இதைச் சாதிக்கச் செய்தது அண்ணன், தங்கைகளான செந்தில்குமார் - மணிமாலா! அண்ணன், பெங்களூரில் தனியார் நிறுவனமொன்றில் ஆராய்ச்சி பொறி யாளர். தங்கை எம்.காம் முடித்திருக்கிறார்.

''பெங்களூரில் எம்.ஐ.டி.மீடியா லேப் சார்பில் நடைபெற்ற போட்டியில் நான் இந்தியாவின் டாப் 100 இன்ஜினீயர்களில் ஒருவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது என்னிடம், 'நீங்கள் எந்த ஊர்?’ என்று கேட்டார்கள். 'மதுரை’ என்றேன். உடனே, 'அங்கே இருப்பவர்கள் எல்லாம் தொழில்நுட்ப விழிப்பு உணர்வு இல்லாமல்தானே இருப்பார்களே? அங்கிருந்து எப்படி டாப் லிஸ்ட்டில் இடம் பிடித்தீர்கள்?!’ என்றார்கள் கேலியாக. இது என்னை மிகவும் பாதித்தது. என் ஊர் மாணவர்களை டெக்னாலஜியில் (தொழில்நுட்பத்தில்) சாதிக்க வைக்க வேண்டும்... டெக் பிசினஸில் அவர்களை களமிறக்க வேண்டும் என்று திட்டமிட்டேன். இதற்காக ஓராண்டுக்கு முன்பு 'மீ டூ மென்ட்டர்’ அமைப்பு உருவானது!''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்