வருங்காலப் பத்திரிகையாளர்களை வரவேற்கிறோம்...

மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2015-16

ளமையின் விசையை, திறமையின் திசையைத் தீர்மானிக்கும் ஒரு தங்கத் தருணம்... இதோ!

சமூக மாற்றத்துக்கு ஒரு விதையாக, சமூக வளர்ச்சிக்குப் பாதையாக இருக்க விரும்பும் கல்லூரி மாணவர்களுக்கு... களம் அமைக்கிறது விகடன்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அச்சு மற்றும் காட்சி ஊடகத்தில் பயிற்சிபெற வாய்ப்பு அளித்து, கனிவோடு கற்றுக்கொடுத்து, பட்டை தீட்டிப் பயிற்சிதரும் விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் அடுத்த அத்தியாயம் ஆரம்பம்!

விகடன் பத்திரிகையாளர் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள், பல துறைகளில் தங்களுக்கென தனி முத்திரை பதித்து, வெற்றிப் பாதைகளில் பயணிக்கிறார்கள். பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா, சட்டம், இலக்கியம், தொழில்நுட்பம், தகவல்தொடர்பு, தொழில் துறை என தாங்கள் தடம் பதிக்கும் அனைத்துத் துறைகளிலும் வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள்.

இளமைக்கு 'ஆ.வி’, உண்மைக்கு 'ஜூ.வி’, பெண்மைக்கு 'அவள்’, அறிவுக்கு 'சுட்டி’, அருளுக்கு 'சக்தி’, பொருளுக்கு 'நாணயம்’, பயணத்துக்கு 'மோட்டார்’, வளமைக்கு 'பசுமை’, நலத்துக்கு 'டாக்டர்’, விஷ§வல் ட்ரீட்டுக்கு 'விஜிட்டல்’, இணையத்தில் 'விகடன் டாட் காம்’ என உலகின் கடைக்கோடி தமிழன் வரை நீண்டிருக்கின்றன விகடனின் கரங்கள். அந்தக் கையைப் பற்றிக்கொள்ள பலரும் தவம்கிடக்க, உங்களைத் தேடி வருகிறது ஓர் அரிய வாய்ப்பு!

1.7.97-க்கு முன் பிறந்த அனைத்துக் கல்லூரி மாணவ-மாணவிகளும் இந்தத் திட்டத்தில் பங்கேற்கலாம். இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ-மாணவியர், தற்போது (2014-2015) கல்லூரியில் படிப்பவராகவும், அடுத்த ஆண்டு (2015-2016) கல்லூரிப் படிப்பைத் தொடர்பவராகவும் இருக்க வேண்டும். அதாவது, 2014-2015-ம் ஆண்டில் பள்ளி இறுதி ஆண்டு படிப்பவர்களோ அல்லது கல்லூரியில் எந்தப் பிரிவிலும் இறுதி ஆண்டு படிப்பவர்களோ விண்ணப்பிக்க வேண்டாம். தபால் மூலம் கல்வி பயில்பவர்கள் இந்தத் திட்டத்தில் கலந்துகொள்ள இயலாது.

இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தாளைத் தமிழில் பூர்த்திசெய்து, கோரப்பட்டிருக்கும் இணைப்புகளோடு 15.3.15-ம் தேதிக்குள் எங்களுடைய பரிசீலனைக்கு அனுப்பவேண்டியது அவசியம் (இந்த விண்ணப்பத்தை பிரதி எடுத்தும் பயன்படுத்தலாம்). தகவல்தொடர்புக்காக உங்களுடைய தொலைபேசி அல்லது செல்பேசி எண் அவசியம் தேவை. விண்ணப்பம் குறித்த முழு விவரங்களை, அடுத்து வரும் பக்கங்களில் காணலாம்.

ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் புகுந்து விளையாடும் த்ரில்லான களம் இது. உற்சாகமாக உங்களையும் அழைக்கிறோம்.

வாழ்த்துகள்!

- ஆசிரியர்

 விண்ணப்பத்தை PRINT எடுக்க படத்தை கிளிக் செய்யவும்


விண்ணப்பத்துடன் தவறாமல் அனுப்ப வேண்டியவை:

(அ) கீழ்க்காணும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றை, சொந்தக் கையெழுத்தில் தெளிவாகப் புரியும்படி தமிழில் கட்டுரையாக எழுத வேண்டும். கட்டுரை, நான்கு பக்கங்களுக்குமேல் இருக்கக் கூடாது. தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுதவும்.

'மனிதாபிமானம்னா அதை அவங்ககிட்டதான் கத்துக்கணும்; அவங்க கைமணத்துல சமையல்னா, ஊரே மணக்குமே; சான்ஸே இல்லே, இவங்க ரொம்ப சூப்பர்ல...?’ இப்படி நினைத்து நினைத்து உங்களை வியக்கவைக்கும் பெண்கள் உங்கள் கல்லூரியில்... உங்கள் ஊரில் இருக்கலாம். அவர்களை நீங்கள் பேட்டி எடுத்து உங்களின் அழகான எழுத்துக்களால் அடையாளப்படுத்தலாமே!

(அல்லது)

உலகம் நம் உள்ளங்கைக்குள்! வாட்ஸ்அப், ஃபேஸ்புக், நெட் என ஒரு மொபைல் இருந்தால் போதும். நாம் தனிமையை உணரவே மாட்டோம். செல்போனோடு நீங்கள் எந்த அளவு கனெக்ட் ஆகியிருக்கிறீர்கள், உங்களின் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு நிமிடத்தையும் அது எப்படித் தீர்மானிக்கிறது என்பதை செம ஜாலியாக எழுதி அனுப்புங்களேன்!

 (ஆ) புகைப்படத் துறையில் மட்டும் பயிற்சிபெற விரும்பும் மாணவ - மாணவியர், மேற்கூறிய கட்டுரையை அனுப்பத் தேவை இல்லை. அதற்குப் பதிலாக, இந்த விண்ணப்பம் வெளியான தேதிக்குப் பிறகு, தங்கள் பகுதியில் நடக்கும் ஏதாவது ஒரு சம்பவத்தைப் படங்களாக எடுத்து, அவற்றுக்கான குறிப்புகளோடு அனுப்ப வேண்டும். (ஐந்து படங்களுக்குமேல் அனுப்ப வேண்டாம்). ஒவ்வொரு புகைப்படத்தின் பின்புறத்திலும் தங்களின் பெயரையும் முகவரியையும் குறிப்பிட வேண்டும்.

ஸ்டில் கேமரா தவிர, கூடுதல் தகுதியாக வீடியோ கேமரா இயக்கும் அனுபவம் உண்டா? இருப்பின், நீங்கள் பதிவுசெய்த காட்சி, நிகழ்ச்சி அல்லது குறும்படத்தின் குறுந்தகடுப் பதிவுகளை அவசியம் அனுப்பிவைக்கவும்.

(இ) 'நிருபர் புகைப்படக்காரர்’ பிரிவுக்கு விண்ணப்பம் செய்பவர்கள், மேற்கூறிய (அ, ஆ) இரண்டையும் செய்து அனுப்ப வேண்டும்.


இந்தத் திட்டத்தில் பங்குபெற விரும்பும் மாணவ - மாணவியர், விண்ணப்பத்தாளை உண்மையாகவும் முழுமையாகவும் பூர்த்திசெய்து, 15.3.15-ம் தேதிக்குள் எங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

எந்தக் காரணம் கொண்டும் கட்டுரைகளையும் புகைப்படங்களையும் திருப்பி அனுப்ப இயலாது. அஞ்சல்தலைகளை இணைக்கத் தேவை இல்லை. இந்தத் திட்டம் சம்பந்தமாக எந்தக் கடிதப் போக்குவரத்தும் வைத்துக்கொள்ள இயலாது.

அடுத்த கட்டமாக, 19.4.15-ம் தேதி அன்று சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு ஊர்களில் எழுத்துத் தேர்வு நடக்க இருக்கிறது. முதல் கட்டத்தில் தேர்வுபெறும் மாணவமணிகள், மேற்கண்ட ஊர்களில் ஏதாவது ஒன்றில் தேர்வு எழுத அழைக்கப்படுவார்கள்.

10.4.15-ம் தேதிக்குள் எங்களிடம் இருந்து எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள், முதல் கட்டப் பரிசீலனையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.

விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி: மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை  -  600 002.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick