மாண்புமிகு மங்கை!

ஐரோம் ஷர்மிளா

ந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில், கேள்விகள் எதுவு மின்றி குடிமக்களின் உரிமையை பறிக்கச் செய்யும் ராணுவத்தின் சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் இருக்கிறது. இதை எதிர்த்து கடந்த, 2000-ம் ஆண்டு முதல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கிறார் இரும்புப் பெண் ஐரோம் ஷர்மிளா. 'தற்கொலை முயற்சி’ என்று சொல்லி போலீஸ் இவரைக் கைது செய்வதும், பிறகு, விடுதலை செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. இவர், கடந்த 14 ஆண்டுகளாக திட உணவுகளை உண்ணவில்லை... தன் தாய் முகத்தையும் பார்க்கவில்லை. மருத்துவர்களின் உதவியோடு வலுக்கட்டாயமாக திரவ உணவு ஏற்றப்படுகிறது. 2014-ம் ஆண்டு லோக் சபா தேர்தலில் தங்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிட இவரை அழைத்தன ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள். ஆனால், 'நான் ஒரு போராளி, அரசியல்வாதியல்ல’ என்று மறுத்துவிட்டார். இந்த 42 வயதுப் பெண்ணின் போராட்டம் தொடர்கிறது!  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்