டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு:ரூ. 100

வாசகிகள் அனுப்பிய டிப்ஸ்களை தேர்ந்தெடுத்து, தொகுத்து வழங்கியவர்: விஜயலட்சுமி ராமாமிர்தம்

கூட்டு, குருமா, சாம்பார், மோர்க்குழம்பு போன்றவை நீர்க்க இல்லாமல் திக்காக இருப்பதற்காக கடைசியில் அரிசி மாவைக் கரைத்து விடுவோம். அதற்கு பதில்,  இந்தப் பதார்த்தங்களுக்காக தேங்காய், மிளகாய், தனியா போன்றவற்றை  மிக்ஸியில் அரைக்கும்போதே அரை ஸ்பூன் அரிசி மாவையும் சேர்த்து அரைத்துவிட்டால், மாவுக் கரைசலும் நன்றாகக் கொதித்து, கூட்டு முதலியவை கெட்டியாகவும், ருசியாகவும் இருக்கும்.

- உஷா நாராயணன், குரோம்பேட்டை

ணவு உண்ட பின், ஒரு சிறிய கல்கண்டு, வெல்லக்கட்டி, அல்லது மிட்டாயை வாயில் அடக்கிக் கொண்டால் உமிழ் நீர் நன்றாகச் சுரக்கும். இது, உணவு எளிதில் ஜீரணமாக உதவும்.

- ஆர். சம்யுக்தா, ஈரோடு

ச்சை மிளகாய் சேர்த்து சட்னி முதலியவற்றை அரைக்கும்போது, முதலில் மிளகாயைத் துண்டுகளாக்கி வெந்நீரில் போடவும். சற்று ஆறியதும் எடுத்து அரைத்தால், மிளகாய் நன்கு மசிவதுடன், சட்னி வெகு நேரம் கெட்டுப் போகாமலும் இருக்கும்.

- தாரகை, கும்பகோணம்

தினைந்தே நிமிடங்களில் தேன்குழல் தயாரிக்க வேண்டுமா..? ஒரு ஆழாக்கு மைதா மாவை ஐந்து நிமிடங்கள் ஆவியில் வைத்து எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் சூடான எண்ணெய், ஒரு ஸ்பூன் நெய் சேருங்கள். பிறகு, மாவில் அரை ஸ்பூன் சீரகம், சிறிது பெருங்காயத்தூள், உப்பு கலந்து, தேவையான தேங்காய்ப்பால் ஊற்றி முறுக்கு பதத்துக்கு மாவு பிசைந்து, அச்சில் பிழிந்தால், மொறுமொறு தேன்குழல் தயார்!

- எஸ்.நவீனா தாமு, பொன்னேரி

ரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் ஒரு ஸ்பூன் டீத்தூள், கொஞ்சம் சோப்புத் தூள் போடுங்கள். அதில் வெள்ளிப் பாத்திரங்கள், விளக்குகள் முதலியவற்றைப் போட்டு தண்ணீர் ஆறும் வரை ஊற வையுங்கள். பிறகு, எடுத்து அழுத்தித் துடைத்தால் வெள்ளிப் பாத்திரங்கள் பளீரிடும்.

- மஞ்சு வாசுதேவன், நவி மும்பை

திக விலையில்லாத இரண்டு புதிய டூத் பிரஷ்களை வாங்கி சமையலறையில் வைத்துக்கொள்ளுங்கள். ஒன்றை சமையலறை சிங்க், குழாய்களின் கீழ் பாகம், போன்ற இடங்களை சுத்தம் செய்யவும், மற்றொன்றை மிக்ஸி, கிரைண்டர் போன சாதனங்களை சுத்தம் செய்யவும் உபயோகிக்கலாம். கைகளால் சுலபமாக எட்ட முடியாத இடுக்குகளிலும் பிரஷ் கொண்டு எளிதாகவும் நன்றாகவும் சுத்தம் செய்யலாம்.

- ஆர்.பார்வதி, கொரட்டூர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick