ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ராமாயணத்தில் ராமபிரான் தந்தையின் வாக்கை நிறைவேற்றுவதற்காக வனத் துக்குச் செல்லத் தயாராக இருக்கிறார். அருகில் மகாலக்ஷ்மியின் அவதாரமான சீதாபிராட்டியாரும் உடன் செல்லத் தயாராக இருக்கிறாள். அந்த நேரத்தில் இளையாழ்வான் லக்ஷ்மணன் அங்கே வருகிறான். எப்போதும் ராமனைப் பிரியாமல் அவனுடைய நிழலைப் போல் இருப்பவனாகிய லக்ஷ்மணன், வனத்துக்குச் செல்லும் ராமனுடன் தானும் சென்றுவிட விரும்புகிறான். ஆனாலும், ராமன் மறுத்துவிடுவாரோ என்று அவனுக்குள் ஒரு தயக்கம். என்ன செய்வது என்று யோசித்தவன், ராமர் தனியாக இருக்கும்போது சென்று தன்னுடைய விருப்பத்தைக் கூறுவதைவிடவும், சீதா பிராட்டியாருடன் அவர் சேர்ந்திருக்கும் நேரம் பார்த்துக் கூறுவதே சரியாக இருக்கும் என்று நினைத்தான். அதற்கான நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். சீதாபிராட்டியாரின் அனுக்கிரஹத்தை முதலில் பெற்றுவிட்டால், ராமரின் அனுக்கிரஹம் சுலபமாகக் கிடைத்துவிடும் என்பதுதான் காரணம்.

ராமபிரானும் சீதாபிராட்டியாரும் வனத் துக்குச் செல்லத் தயாரான நிலையில், முதலில் ராமரைப் பார்க்காமல், சீதாபிராட்டியாரை பார்த்து நமஸ்காரம் செய்து அவளுடைய அனுக்கிரஹத்தை பெற்றுக்கொண்டான் லக்ஷ்மணன். அதன்பிறகே ராமரிடம் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்