ஸ்டூடன்ட்ஸ் புரொஃபைல்!

சேலம், சோனா தொழில்நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகள்

வழங்கும் ‘ஸ்டூடன்ட்ஸ் புஃரொபைல்’ இது!

ஸ்டன்ட் புயல்!

ண்களுக்கு நிகரா ஸ்டன்ட்டுகள் செய்து அசத்துறாங்க, மூன்றாம் ஆண்டு ஃபேஷன் டெக்னாலஜி படிக்கும் ராஜேஸ்வரி. ‘‘என் ஃப்ரெண்டோட அண்ணாவைப் பார்த்துதான் எனக்கும் இந்த ஆசை வந்தது. நானும் கத்துக்கிட்டேன். இப்போ எல்லாவிதமான பைக்லயும் ஸ்டன்ட் சீக்வன்ஸ் செய்வேன். நான் வெச்சிருக்கும் `யமஹா ஆர்15’ மாடல் பைக்ல, 50-க்கும் மேற்பட்ட ஸ்டன்ட் ஷோக்கள் செய்து, அதன் மூலம் கிடைக்கும் தொகையை அநாதை இல்லங்களுக்கு வழங்கிட்டு இருக்கேன். காரும் சூப்பரா ஓட்டுவேன். `எக்ஸ்.யூ.வி.500’ மாடல் காரில் சென்னை வரைக்கும் லாங் டிரைவ் போயிருக்கேன். பாக்ஸிங்ல நான் நேஷனல் லெவல் பிளேயர். தேசிய அளவில் 3 தங்கம், மாநில அளவில் 10 தங்கம் வாங்கியிருக்கேன்!’’

அடி தூள்!

ரீயூஸ் ஃபேஷன் டிசைனர்!

 

வீண் என்று நினைக்கிற பொருட்களைப் பயன்படுத்தி டிரெஸ் டிசைன் செய்வதுதான், மூன்றாம் ஆண்டு ஃபேஷன் டெக்னாலஜி படிக்கும் நிஷாலின் சிறப்பு. ‘‘இதுவரை பதினைஞ் சுக்கும் அதிகமான நேஷனல் லெவல் ஃபேஷன் ஷோக்களில் கலந்துகிட்டு, அதில் பத்துக்கும் அதிகமான தடவை முதல் பரிசு வாங்கியிருக்கேன். வேஸ்ட் என்று ஒதுக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பேப்பர், டீ கப், ஸ்ட்ரா இதையெல்லாம் வெச்சு, குறைந்த செலவில் ஆடைகள் தயாரிக்கும் சேலஞ்சை விரும்பி ஏற்பேன். என் தலைமையிலான டீம்ல 10 ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. ஷோக்கள் வந்தா, பகல், இரவுனு பார்க்காம உழைப்போம். என்னோட திறமையைப் பார்த்து, பெரிய ஷோக்களுக்கு எல்லாம் ஆஃபர் வருது. புதுமையான ஓவியங்கள் வரைவது, என்னோட இன்னொரு திறமை!’’

ஆடை... மேடை... அசத்துங்க நிஷால்!

வாள் சண்டை மன்னன்!

வாள் சண்டைப் போட்டிகளில் மாவட்ட அளவில் 20 தங்கம், மாநில அளவில் 22 தங்கம், 10 வெள்ளி, 10 வெண்கலம், தேசிய அளவில் 2 வெள்ளி, 3 வெண்கலம்னு வென்ற வெற்றியாளர், இறுதியாண்டு ஃபேஷன் டெக்னாலஜி படிக்கும் நரேஷ். ‘‘ஐந்தாம் வகுப்பில் இருந்து வாள் சண்டை பயிற்சி எடுக்கிறேன். ஒரு முறை நேஷனல் லெவல் போட்டியில என் மாஸ்டர் மணிகண்டன் என்னோடு எதிராளியா மோதினாரு. நான் மாஸ்டரையே வென்று வெள்ளிப் பதக்கம் வாங்கினது, மறக்க முடியாத அனுபவம். நேரம் கிடைக்கும்போது, ஃப்ரெண்ட்ஸுக்கும் வாள் சண்டை சொல்லிக் கொடுக்கிறேன்!’’
 
சண்டை சேவல்!

படிப்பிலும் ஹிட்... இசையிலும் ஹிட்!

பாடல், கிடார்னு இசையில் உயரங்கள் எட்டிவரும் இளம் புயல், இறுதியாண்டு இ.சி.இ படிக்கும் ஜகந்த் நிவாஸ். ‘‘டிரெயினிங் காலேஜ் ஆஃப் மியூசிக் லண்டன்’ அமைப்பு நடத்தும் போட்டிகளில், இரண்டு கிரேடில் டிஸ்டிங்ஷன் வாங்கியிருக்கேன். இன்டர் காலேஜ் போட்டிகளில் கிடார் வாசிச்சிட்டே பாடி, முதல் பரிசுகளை டார்கெட் பண் ணிடுவேன். படிப்பிலும் நான் டாப்! வெளிநாட்டுக்கு சென்று படிப்பதற்கான டோஃபல் (toefl) தேர்வில் இந்த வருஷம் இந்தியாவிலேயே முதலிடம் பெற்றது, சாட்சாத் நானேதான்! ‘கிராஜுவேட் ரெக்கார்ட் எக்ஸாமினேஷன்’ தேர்விலும் டாப் டென் ரேங்க்ல வந்திருக்கேன். இந்த வருஷம் கல்லூரியின் பெஸ்ட் அவுட்கோயிங் ஸ்டூடன்ட் அவார்டு, எனக்குதான். ஃபேஷன் ஷோக்களில் மாடல், பேஸ்கட் பால் பிளேயர்னு எனக்கு இன்னும் சில முகங்களும் இருக்கு!’’

வெல்டன் ஜி!
 

நடனம்... நாட்டியம்... நர்த்தனா!

ர்த்தனா, பெயருக்கு ஏற்றாற்போல பரதத்தில் கலக்கி வரும் இறுதியாண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவி. ‘‘மூன்றாம் வகுப்பு படிக்கும்போது பரதம் கத்துக்க ஆரம்பிச்சு, ஒன்பதாம் வகுப்பில் அரங்கேற்றம் செய்தேன். சிதம்பரம், நடராஜர் சந்நிதியில் நடைபெறும் ‘நாட்டியாஞ்சலி’ நிகழ்ச்சியில் தொடர்ந்து நான்கு முறை ஆடியிருக்கேன். தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது, ஆயிரம் நடனக் கலைஞர்கள் நடனம் ஆடிய சாதனை நிகழ்ச்சியில், ஆயிரத்தில் நானும் ஒரு கலைஞரா நடனம் ஆடியது மறக்க முடியாத தருணம். இந்த வருஷம் சேலத்தில் நடந்த ‘சேலத்தில் திருவையாறு’ நிகழ்ச்சியிலும் பாடியிருக்கேன். ‘இளம் நடன மயில்’, ‘பரதநாட்டிய சுடர்’ இதெல்லாம் நான் வாங்கின விருதுகள்!’’

ஜல்ஜல் சலங்கை!

தொகுப்பு: கு.ஆனந்தராஜ் படங்கள்: எம்.விஜயகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick