நமக்குள்ளே...

சித்திரைத் திருவிழா, மாங்கனித் திருவிழா, தேர்த் திருவிழா... என்று ஊர் ஊருக்கும் மேளதாள ஓசை கேட்கும் விழாக்காலம் இது. அசலூருக்கு வாக்கப்பட்டுப் போனவர்களாக இருந்தாலும்... வேலை, பிசினஸ் என்று வெளியூர்களில் குடியேறிவிட்டவர்களாக இருந்தாலும்... திருவிழா என்று வந்துவிட்டால், சொந்த ஊருக்கு ஓடோடி வந்துவிடுவார்கள். கொடியேற்றம், உறியடி, தேரோட்டம்... என்று வீட்டுக்கு வீடு படையல், விருந்து, அன்னதானம் என்று ஊரே அமர்க்களப்படும்!

தேரடி வீதிகளிலும், தெப்பக்குளக் கரைகளிலும் முளைக்கும் புதுப்புதுக் கடைகளில் நாகக்கன்னி, ரங்கராட்டினம், ஜவ்வு மிட்டாய், கண்ணாடி வளையல் ஆகியவற்றோடு, பேட்டரி கார், மெஹந்தி கோன், கேஸ் பலூன் ஆகியவையும் வண்ணங்கள் சேர்க்கும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்