புடவையில் மியூரல்!

துரையில் நடக்கும் மீனாட்சி திருக்கல்யாணத்தை, சென்னை, வேளச்சேரியில் நம் கண் முன்னே, ஃபேப்ரிக் வண்ணங்களில் தத்ரூப மாகக் கொண்டுவருகிறார்... பிரபல ஓவியக் கலைஞரும் எம்ப்ராய்டரி நிபுணருமான உஷா ரமேஷ். புடவை ‘பள்ளு’வில், கேரள மியூரல் ஓவிய பாணியில் திருக்கல்யாணக் கோலத்தை வடித்திருக்கிறார் உஷா.

‘‘கேரளாவில் அந்தக் காலத்தில் சுவர் ஓவியங்களாக வரையப்பட்ட இந்த வகை ஓவியங்களை, ‘பஞ்சவர்ண ஓவியங்கள்’னு சொல்லுவாங்க. இதில் மஞ்சள், சிவப்பு, கறுப்பு, பச்சை, நீலம்னு அஞ்சு நிறங்கள் மட்டும்தான் பயன்படுத்துவாங்க. அந்த வண்ணங்களையும், கிழங்கு மஞ்சள், சிவப்புக் காவி, கரி, இலைகளின் பச்சையம், நீலாம்பரிச் செடினு இயற்கை யான மூலப்பொருட்களிலிருந்துதான் எடுப்பாங்களாம். கேரளாவில் குருவாயூர் கோயில், அனந்தபத்மநாப சுவாமி கோயில் மாதிரியான பெரிய கோயில்களிலும், செல்வந்தர்கள் வீடுகளிலும், சுவர்களை இந்த வகை ஓவியங்கள் அலங்கரிக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்