'டாக்டர்' இட்லி!

றுமையில் பிறந்த இனியவனை, இன்று வானில் ஏற்றிவிட்டிருக்கிறது இட்லி வியாபாரம். இதுவரை 1,328 இட்லி வகைகளைக் கண்டுபிடித்துள்ள இவர், 124 கிலோ இட்லி செய்து சாதனை புரிந்தவர்; இட்லிக்காகவும் சமூக சேவைக்காகவும் இரண்டு டாக்டர் பட்டங்கள் பெற்றவர். இன்று பல கல்லூரிகளில் தன்னம்பிக்கை உரை தந்துகொண்டிருக்கிறார்.

‘‘கோவைதான் என் சொந்த ஊர். ரொம்ப ஏழ்மையான குடும்பம். எங்க வீட்டுல ஒன்பது பிள்ளைங்க. அண்ணனுங்க எல்லோரும் மெக்கானிக் கடை, டீக்கடைனு வேலைக்குப் போக, நான் ஆட்டோ ஓட்டினேன். ஹோட்டலுக்கு இட்லி சுட்டுக் கொடுத்துட்டு இருந்த சந்திராம்மாவுக்கு, தினமும் அண்டாவுல மாவரைசிட்டு வந்து கொடுக்கறது, சுட்ட இட்லியை ஹோட்டலுக்குக் கொண்டுபோய் கொடுக்கறது, அரிசியைக் கழுவுறது, மாவரைச்சு எடுத்துட்டு வர்றது, இட்லி அவிச்சி சப்ளை பண்றது, இட்லியை பல கடைகளுக்கும் சாம்பிளுக்குக் கொடுத்து ஆர்டர் வாங்கிக் கொடுக்குறதுனு உதவ ஆரம்பிச்சேன். நாள் ஒன்றுக்கு 300 இட்லி விற்ற சந்திராம்மாவின் வியாபாரம், நான் சேர்ந்த ஒரு மாதத்தில் 3,000 இட்லியா உயர்ந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்