சாணியடித் திருவிழா!

மிழக, கர்நாடக மாநில எல்லையில் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள தாளவாடி, கும்டாபுரம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோயிலில், வித்தியாசமான சாணியடித் திருவிழா நடந்து வருகிறது. தீபாவளிப் பண்டிகை முடிந்து நான்காவது நாள் கொண்டாடப்படும் இந்த விழாவில், ஒருவர் மீது ஒருவர் மாட்டு சாணத்தை உருண்டை பிடித்து வீசுகிறார்கள். திருவிழாவுக்கு முன்னதாக பசுமாட்டுச் சாணத்தை சேகரிக்கும் இந்த கிராம மக்கள், அதைக் கோயிலின் பின்புறத்தில் குவித்து வைக்கின்றனர். கிராமத்தைச் சேர்ந்த ஆண்களும், சிறுவர்களும் மேற்சட்டை அணியாமல் கோயிலுக்கு வந்து பீரேஸ்வரை வழிபட்டு, அதன் பின்னர் அங்கு குவித்து வைக்கப்பட்டிருக்கும் சாணத்தை உருண்டைகளாகச் செய்து ஒருவர் மீது ஒருவர் வீசி அடித்துக் கொண்டாட, கூடி இருக்கும் பெண்கள், அதை கைதட்டி ரசித்துப் பார்க்கின்றனர். சில மணி நேரம் நடக்கும் இந்த சாணியடித் திருவிழா வெகுவிமரிசையாக நடக்கிறது. அதன் பின்னர் அனைவரும் ஊர்க்குளத்தில் குளித்து, பீரேஸ்வரரை வழிபட்டுத் திரும்புகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்