வெள்ளரி எனும் வரப்பிரசாதம்!

கோடைகாலத்தில் தாராள மாகக் கிடைக்கும் இயற்கையின் வரப்பிரசாதங்களுள் வெள்ளரிக்காயும் ஒன்று. இதில் வெள்ளரிப்பிஞ்சுக்கு நிறைய மருத்துவக்குணம் உள்ளது. வெள்ளரிப்பிஞ்சை தொடர்ந்து சாப்பிடுவதால் சிறுநீர் துவாரங்களில் ஏற்படும் தினவு, நீர்ச்சுருக்கு போன்றவை குணமாகும். மேலும், பொதுவாக வெள்ளரிப்பிஞ்சு சாப்பிட்டால் நல்ல பசி உண்டாகும். உஷ்ண வாயுவால் அவதிப்படுவோரும், சிறுநீர் போகாமல் அவதிப்படுவோரும் வயிறு புடைத்துக்கொண்டு அவதிப்படு வோரும் வெள்ளரிக்காயை பச்சடி செய்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளரியின் விதைக்கும் நல்ல மருத்துவக்குணம் உண்டு. விதையை நன்றாக அரைத்து அதனுடன் 5 மடங்கு தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால் நீரடைப்பு, கல்லடைப்பு, சதையடைப்பு, வெள்ளைப்படுதல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் போன்றவை சரியாகும். வெள்ளரி விதையை நீர் விட்டு அரைத்து, சிறுநீர் கழிக்க சிரமப்படும் குழந்தை களின் தொப்புள் பகுதி மற்றும் அடிவயிற்றில் பூசினால், அடுத்த சில நிமிடங்களில் கைமேல் பலன் கிடைக்கும்.

- எம்.மரிய பெல்சின்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick