சூடு தணிக்கும் பதநீர் - நுங்கு

ற்பக விருட்சம் எனப்படும் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர், நுங்கு, பனங்காய், கிழங்கு உள்ளிட்ட எல்லா பொருட்களுமே பயன்தரக் கூடியவையாகும். குறிப்பாக, பதநீர் சுவை மிகுந்தது மட்டுமல்லாமல், மருத்துவப் பயனும் நிறைந்தது. 50 கிராம் அளவு வெந்தயத்தை லேசாக வறுத்துப் பொடித்து காலை, மாலை இரண்டு வேளை 50 மில்லி அளவு சூடுபடுத்திய பதநீருடன் கலந்து அருந்தி வந்தால்... ரத்தக்கடுப்பு, மூலச்சூடு போன்றவை தணியும். அதேபோல மஞ்சளைப் பொடித்து, அரை தேக்கரண்டி அளவு எடுத்து 50 மில்லி  (காலையில் இறக்கிய) பதநீருடன் கலந்து உட்கொள்ள... வயிற்றுப்புண், தொண்டைப்புண், வெப்பக்கழிச்சல், சீதக்கழிச்சல் நீங்கும். பனை நுங்கு சாப்பிடு
வதால், கோடைகாலத்தில் வரக்கூடிய வியர்க்குருவிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம். வியர்வையையும், குமட்டலையும் கட்டுப்படுத்துவதோடு வேனிற்கால நீர்வேட்கையை போக்கும், பசியைத் தூண்டும். மேலும், அம்மை நோயின் தீவிரத்தை வெகுவாக குறைக்கும் தன்மை கொண்டது பனை நுங்கு.

எம்.மரிய பெல்சின்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick