ஃபங்ஷன்ஸ்... பியூட்டீஸ்!

அவள் 16

மது ஷாலினியின் டீ லெங்த் கவுன்!

நிகழ்வு: ‘தூங்காவனம்’ பட ஆடியோ லான்ச்

காஸ்ட்யூம் ஹைலைட்ஸ்: யாருக்கும் சூட் ஆகும் டீ லெங்த் கவுன். இதில் லைட் ஷேட்கள், கூடுதல் அழகா இருக்கும். கையில் கொஞ்சம் பெரிய கஃப், ஒரு நெக் பீஸ், கோல்டன் கலர் ஸ்லிப்பர் போட்டா ஹைலைட்டா இருக்கும் (இன்னும் கெத்து). மதுஷாலினி போட்டிருக்கும் கறுப்பு நிற ஆங்கிள் ஸ்ட்ரிப் ஷூஸ், டிரெஸுக்கு கொஞ்சம் சூட் ஆகலைனாலும், அவரோட சிம்பிள் லுக்குக்கு மொத்த ஸ்டைலும் கச்சிதமா பொருந்துது.

த்ரிஷாவும் ஓம்ப்ரே கலர் பேட்டர்னும்!

நிகழ்வு: ‘தூங்காவனம்’ பட ஆடியோ லான்ச்

காஸ்ட்யூம் டிசைனர்: ஸ்வேதா மல்பானி

காஸ்ட்யூம் ஹைலைட்ஸ்: ஃப்ளோர் லெங்த் மேக்ஸி. ஓம்ப்ரே கலரான லைட் ஷேடில் கலந்த டார்க் ஷேட் (லைட் கலரும் டார்க் ஷேடும் கலந்த கலவையே). த்ரிஷாவின் உயரமும், ஸ்லிம்மி சைஸும் மேக்ஸிக்கு ஹைலைட். குண்டான பெண்களும் மேக்ஸி போடலாம், பட், தொப்பை இருக்கக் கூடாது. ஸ்வீவ்லெஸ் விரும்பாதவங்க இந்த மேக்ஸிக்கு டார்க் பிரவுன் கலரில் ஷார்ட் ஷ்ரக் (லேடீஸ் ஓவர் கோட்) போட்டுக்கலாம்.

8 பேனல் ஸ்கர்ட்!

நிகழ்வு: ‘புரூஸ் லீ’ பட ஆடியோ லான்ச்

காஸ்ட்யூம் டிசைனர்: நீடா லுல்லா

ஆக்ஸசரி டிசைனர்: சுஹானி பிட்டி (ஹைதராபாத்)

காஸ்ட்யூம் ஹைலைட்ஸ்: மைல்டு பீச் கலரில் க்ராப் டாப், 8 பேனல் ஸ்கர்ட். ஃப்ளாட் வயிறு இருக்கிறவங்களுக்கான சாய்ஸ். அந்த வகையில், ரகுல் ராக்கிங். ‘எனக்குக் கொஞ்சமா டம்மி (தொப்பை) இருக்கே’னு நினைக்கிற பெண்கள், ஹிப் பெல்ட்டும், கழுத்தோட சேர்ந்து வர்ற அக்ஸசரீஸும் போட்டா... இடுப்பை மறைக்கும். வீட்டில் திட்டு விழாமலும் இருக்கும். கையில் கஃப் (காப்பு), பெஸ்ட் மேட்ச்.

மீபத்திய ஆடியோ லான்ச்சஸ், அங்க நம் ஸ்வீட் செலிப்ரிட்டீஸ், அவங்களோட ஹாட் காஸ்ட்யூம் போர்ட்ரெய்ட்ஸ் இங்க! அதில் டிப்ஸ் சேர்த்துச் சொல்றாங்க, ‘மய்யம்’ பட காஸ்ட்யூம் டிசைனர் வருணா!

லெஹங்கா ஸ்ருதிஹாசன்!

நிகழ்வு: தூங்காவனம் ஆடியோ லான்ச்

காஸ்ட்யூம் டிசைனர்: பிரதியூஷாகரிமெல்லா

ஆக்ஸசரி டிசைனர்: சுஹானி பிட்டி

காஸ்ட்யூம் ஹைலைட்ஸ்: ஸ்லீவும் துப்பட்டாவும் சேர்ந்து இருக்கும் ஃபுல் லெஹங்கா. டிரெடிஷனல் கம்மல், குட் மேட்ச். சைஸ் ஸீரோ ஸ்ருதிக்கு கிராண்ட் லுக் கொடுக்க ஹெவி வொர்க் எம்பராய்டரி. பிளம்பி பெண்கள், இதில் ஸ்டோன் வொர்க் செய்து அணியலாம். ஸ்லீவை சின்னதாக்கினால், லாங் மேக்ஸி தோரணையும் கிடைக்கும்.

டார்க் ப்ளூ... காயத்ரி சாய்ஸ்!

நிகழ்வு: ‘மெல்லிசை’ பட ஆடியோ லான்ச்

காஸ்ட்யூம் ஹைலைட்ஸ்: ஒன் ஷோல்டர் லாங் ஸ்லீவ் நீ லெங்த் கவுன். இந்த டார்க் ப்ளூ கலருக்கு ஷாகின்ஸ் பயன்படுத்தினா இன்னும் அழகுதான். பிளெய்ன் பிளாக் அல்லது பிளெய்ன்  வொயிட் கலர் ஷூ போடலாம். பெல்ட் கொஞ்சம் பெருசா இருக்கணும். டார்க் பேபி பிங்க் லிப்ஸ்டிக், காயத்ரியின் டார்க் ப்ளூ டிரெஸ்ஸுக்கு மேலும் அழகுதான்-.

- ஷாலினி நியூட்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick