கேபிள் கலாட்டா!

டஸ்கி ஸ்கின்... சில்க் ஸ்மிதா கண்!

லிஸா ஹெய்டன்... எங்கேயோ பார்த்த ஞாபகமா?! நாம் தினமும் பார்க்கும் டி.வி விளம்பரங்கள் பெரும்பாலானவை லிஸா மேஜிக்தான். லேக் மே, பேன்டீன், மிந்த்ரா, ஸ்லைஸ் என பிராண்ட் பிராண்டாக வாங்கச் சொல்லும் பியூட்டி. 18 வயதில், கல்லூரிக்கு ஃபீஸ் கட்ட, வீட்டு வாடகை கொடுக்க என பொருளாதாரச் சூழலுக்காக மாடலிங் துறைக்கு வந்தவர் லிஸா. கொஞ்சம் டஸ்கியான சருமமும், சில்க் ஸ்மிதா போன்ற போதைக் கண்களும் பெண்ணின் ஹைலைட்ஸ். பரதம், ஜாஸ் நடனங்களை முறைப்படி கற்றுள்ள இவர், நம்ம சென்னைப் பொண்ணு. அமெரிக்காவில் மேல்படிப்பு, ஆஸ்திரேலியா அம்மாவின் சொந்த நாடு என்பதால் மூன்று ஃபேஷன்கள் கலந்த பெண். அப்பா மலையாளி, அம்மா ஆஸ்திரேலியா, கொஞ்சம் அமெரிக்கா வாசமும். அந்த கொலாஜ் அனுபவத்தில் லிஸாவை ஃபேஷன் டிசைனராகவும் மாற்றிய பெருமை, ‘மிந்த்ரா’ ஆடைகள் நிறுவனத்தைச் சேரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்