ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

"தன்னம்பிக்கை ஏற்படுத்துறேன்!"

திருநெல்வேலி, `ஹலோ எஃப்.எம்’மின் நிகழ்ச்சித் தொகுப்பாளர், ஜெயகல்யாணி. காலை பத்து மணிக்கு, ‘இது ‘அக்கம் பக்கம்... வந்தாச்சு ஜெயகல்யாணி’ என்று அவர் பேச்சை ஆரம்பிக்கும்போதே, களைகட்டத் துவங்கிவிடுகிறது நிகழ்ச்சி.

‘‘எட்டு வருஷமா இந்தத் துறையில் இருக்கேன். என் நிகழ்ச்சி மூலமா சமூக மாற்றத்துக்கான ஒரு சின்னப் புள்ளியாச்சும் வைக்கணும்னு நினைச்சேன். அதுக்காக ரொம்ப சீரியஸா எல்லாம் ஷோ பண்ண மாட்டேன். மக்களின் விருப்பம் அறிந்து பாடல்கள் ஒளிபரப்பும்போது, சாதனைப் பெண்கள் பற்றிய அறிமுகம் தருவேன். அப்போ அவங்க செய்யும் சுயதொழில் பற்றிய தகவல்களை மேலோட்டமா சொல்லாமல், அதுக்கான மூலப்பொருட்கள் எங்கே வாங்கலாம், எவ்வளவு முதலீடு தேவைப்படும், விற்பனை எப்படி இருக்கும்னு எல்லா தரவுகளையும் விரிவா கொடுப்பதால, கேட்கிறவங்களுக்கு ‘அட, நாமும் செய்யலாமே’னு தன்னம்பிக்கையும், வழிகாட்டலும் கிடைக்கும்’’ என்றார் ஜெயகல்யாணி.

 மீடியாவில் பெண்கள் வேலை பார்ப்பது இப்போ சர்வசாதாரணமாகிவிட்ட சூழலில், அது குறித்து மத்தவங்களோட பார்வை எப்படி இருக்கு?

 நீண்ட மெசேஜ் ஒன்றினை டைப் செய்யும்போது கூடவே ஒரு ஸ்மைலியும் சேர்க்கிறதால என்ன நடக்குது?

 குழந்தைங்களோட திறமைகளை நசுக்காமல் வளர்ப்பது எப்படி?

 இந்த உலகத்துல அழகான வர்கள் யார்?

 ஒருத்தரோட வெற்றிக்கு தக்கசமயத்தில் தேவையறிந்து உதவ வேண்டியதன் அவசியம் என்ன?

 சமூகவலைதளத்துக்கு அடிமையாவது பற்றி எல்லாரோடயும் சேர்ந்து பேசுறது சரி... யோசிச்சது உண்டா?

 புது உறவுகளிடம் அணுகும் முறை பற்றித் தெரியுமா?

- இது போன்ற இன்னும் பல விஷயங்களை உங்களிடம் பகிரவிருக்கிறார் ஜெயகல்யாணி... ‘கலங்காதிரு மனமே’ குரல் வழியில். 044 - 66802912* என்ற எண்ணில் அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை அழையுங்கள்.

ந.ஆஷிகா  படங்கள்: எல்.ராஜேந்திரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick