Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அழகு முதல் ஆரோக்கியம் வரை... அனைத்தும் தண்ணீர்!

‘தலைவலியா... தண்ணீர் போதுமே?!’, ‘உடல் வலியா... தண்ணீரை எடுங்கள்’, ‘அஜீரணமா... அதுக்கும் தண்ணீர்தான்’ என்ற அனைத்துப் பிரச்னைகளுக்கும் தண்ணீர் மூலம் தீர்வு சொல்கிறார், ஹைட்ரோதெரபிஸ்ட் அனுப்ரியா. சென்னை, திருவான்மியூரில் உள்ள ‘அடோஸ் லியோ ஹைட்ரோதெரபி சென்டர்' நிர்வாகி.  

“வரும் முன் காக்குறது போய், வந்த பின் பார்த்துக்கலாம்னு ரொம்ப மெத்தனமா இருக்கிறதுதான் பல பிரச்னைகளுக்கும் காரணம். உடல் மற்றும் மனப் பிரச்னை வராமலும், வளர்த்துக்கொள்ளாமலும் இருப்பதற்கான தீர்வுதான்... ஹைட்ரோதெரபி. உட்புறம்  மற்றும் வெளிப்புறம் எடுத்துக்கொள்ளக்கூடிய நீர்... இதுதான் ஹைட்ரோதெரபி சிகிச்சை முறை.

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த `செபாஸ்டியன் நீப்'தான் இந்த சிகிச்சை முறைக்குத் தந்தை. இதை ‘நீப் சிஸ்டம் ஆஃப் ஹோலிஸ்டிக் அப்ரோச்’னு சொல்வாங்க. ஹைட்ரோதெரபி, ஹெல்த்தி ஃபுட், ஃபிஸிக்கல் ஆக்டிவிட்டி, மூலிகை உணவுகள், மென்டல் பேலன்ஸ்... இந்த ஐந்து விஷயங்களையும் கடைப்பிடிச்சாலே, டென்ஷன் ஃப்ரீ லைஃப் ஸ்டைல் நிச்சயம்!’’ எனும் அனுப்ரியா, தன் பள்ளிப் பருவத்திலேயே தந்தையை இழந்ததுதான், ஹைட்ரோதெரபிஸ்ட்டாகக் காரணம் என்கிறார்.

“எங்கப்பா திடீர்னு ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார். துயரம் கூடவே, ‘நல்லாயிருந்த அப்பாவுக்கு திடீர்னு என்ன ஆச்சு?’னு மனம் ஆறாமலே இருந்தது. இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, சிங்கப்பூர் சிட்டிசனான எங்க உறவினர் வேலுவின் கம்பெ னியில் வேலைக்குச் சேர்ந்தேன். அவர் மூலமாதான் ஹைட்ரோதெரபி பற்றித் தெரிஞ்சுக்கிட்டேன். ஜெர்மனியில் இருக்கும் பவாரியாவில் உள்ள பேட் வொரிஷொஃபென் (Bad Worishofen), டவுனில் ‘செபஸ்டின் ஸ்கூல் ஆஃப் ஹைட்ரோதெரபி’யில தெரபிஸ்ட் கோர்ஸ் முடிச்சேன். 

அந்த டவுனை எல்லாரும் ‘ஸ்பா டவுன்’னுதான் சொல்வாங்க. அந்தளவுக்கு அந்த ஊர் முழுக்க ஹைட்ரோதெரபிதான். ரோட்டில் அங்கங்க கால் நனையுற அளவுக்கு தண்ணீர்த் தொட்டி வெச்சிருப்பாங்க. நடந்து போறவங்க டயர்டா ஃபீல் பண்ணா, அந்தத் தொட்டியில இறங்கி கால் வெச்சு, 5, 10 நிமிஷம் ரிலாக்ஸ் செஞ்சுட்டுப் போறாங்க!’’ என்றவர், ஹைட்ரோதெரபி சிகிச்சையின் ஹைலைட்ஸ் சொன்னார்...

குடிக்க வெந்நீர், குளிக்க குளிர்ந்த நீர்... இதுதான் சரி. ஆனா, நாம நேர்மாறா பண்ணிட்டு இருக்கோம். இது தவறான பழக்கம்.

மனஅழுத்தத்தால் தலைவலி வந்தால், ஒரு கப் வெந்நீர் குடிச்சுட்டு, குளிர்ந்த நீர் இருக்கும் டப்/பக்கெட்டில் கைகள் தோள்பட்டை வரை மூழ்கி இருக்குமாறு 15 நிமிடங்கள் வெச்சா, தலைவலி தடம் தெரியாமல் போகும். கைகளுக்குப் பதில் கால்களையும் வைக்கலாம்.

ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, அழகுக்கும் தண்ணீர் கைகொடுக்கும். முகத்தில் தொய்வு ஏற்படாமல் இருக்க, ஹேண்ட் ஷவரின் மூலம் தண்ணீரை நெற்றிப் பொட்டிலிருந்து வலது பக்கமா ஆரம்பிச்சு, இடது பக்கம் வழியா, மீண்டும் நெற்றியிலேயே முடிக்கணும். இப்படித் தொடர்ந்து மூன்று முறை செய்யணும். இதில் அடுத்த லெவல் ஸ்டெப்ஸும் இருக்கு.

உடல் எடையைக் குறைக்க தினமும் பல மைல் வாக்கிங் போறதைவிட வீட்டிலேயே ஒரு டப்பில் தண்ணீர் நிரப்பி, அதில் இறங்கி ஜாகிங் செய்யலாம். வாக்கிங்கை காட்டிலும் அதிகளவு எடையைக் குறைக்கலாம்’’ என்று அனுப்ரியா,

‘‘இதெல்லாம் சாம்பிள்ஸ். இந்த இயற்கை வைத்திய முறையில் இன்னும் நிறைய மேஜிக் சாத்தியம். நோயை அண்டவிடாமலும், வந்த நோயை வளரவிடாமலும் காக்கும் கவசமான ஹைட்ரோதெரபி, உங்கள் சாய்ஸ்!’’

- ஆற்று நீரைப்போல மடமடவெனப் பேசி முடித்தார் அனுப்ரியா! 

இந்துலேகா.சி   எம்.உசேன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
வயசு 121... மனசு 31
பட்டுபோன்ற கைகளுக்கு!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close