ஹோம்லி மாடல்!

விளம்பரத்துறை 18 சாதனைப் பெண்கள்

பூர்த்தி... கொழுக்மொழுக் பாப்பாவாக கிட்டத்தட்ட 20 வருடங் களுக்கு முன்பு ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் விளம்பரத்தில் நடித்தவர். இன்று, 650-க்கும் மேலான விளம்பரங்களில் நடித்துள்ள  25 வயது டாப் மாடல் ப்ளஸ் அருள்நிதியின் பெர்சனல் காஸ்ட்யூம் டிசைனர்.  கால்முளைத்த பூவாய் பிஸியாகப் பறந்துகொண்டிருக்கிறார் பூர்த்தி!

‘‘அப்பா சிவில் இன்ஜினீயர். ‘ஜான்ஸன் பேபி’க்கு அப்புறம் சமர்த்தா ஸ்கூல் போயிட்டிருந்தேன். டென்த் படிக்கும்போது ‘கணபதி சில்க்ஸ்’ விளம்பர வாய்ப்பு செகண்ட் கியரா அமைஞ்சது. விமன்ஸ் கிறிஸ்டியன் காலேஜ்ல விஷுவல் கம்யூனிகேஷன் ஒரு பக்கம், மாடலிங் மறுபக்கம்னு காலேஜ் டேஸ் எல்லாம் கலர்ஃபுல்லா போச்சு. டாப் 10 ஜவுளிக்கடை, ஜுவல்லரின்னு படா கடைகளுக்கு எல்லாம் மாடலா நடிச்சாச்சு.

சல்வார், புடவை, ஸ்லீவ், லாங் ஸ்கர்ட்தான் விளம்பரத்தில் என் டிரெஸ் கோடு. டியூப் பேன்ட், ஷார்ட்ஸ் வகையறாக்களுக்கு தடா! ‘ஹோம்லியான விளம்பரம்னா பூர்த்திகிட்ட போகலாம்... கொஞ்சம் கிளாமரான விளம்பரம்னா அப்படியே விலகிப் போகலாம்’னு ஃபீல்ட்ல தெரியும். கிளாமர் தப்புனு சொல்லல, எனக்கு செட் ஆகாது... அவ்ளோதான்!

மாடலிங்கைப் பொறுத்தவரை பெண்களுக்கு பேரன்ட்ஸ் சப்போர்ட் முக்கியம். என் அப்பா, அம்மாவுக்கு இந்த ஃபீல்ட் அவ்வளவா `ஓ.கே இல்லை’ன்னாலும், என் விருப்பத்துக்கு 100 பர்சன்ட் சப்போர்ட்டா இருக்காங்க. எங்க, என்ன ஷூட்னாலும் அப்பா துணைக்கு வந்துடுவார். வாழ்க்கை முழுக்க மாடலாவே இருக்க முடியாதே... அதான் காஸ்ட்யூம் டிசைனர் அவதாரம். ‘டிமான்டி காலனி’, ‘எனக்குள் ஒருவன்’, இப்போ ‘யானும் தீயவன்’ படங்களில் வேலை பார்த்துட்டு இருக்கேன்.

மாடலா வர விரும்பி போர்ட்ஃபோலியோ பண்ணும்போது, ஓவரா போட்டோஷாப் பண்ணிடாதீங்க. விளம்பரத்துக்கு உங்க ரியல் ஃபேஸ்தான் வேணும். ஒல்லியா, வெள்ளையா இருக்கிறவங்கதான் மாடல் என்பதெல்லாம் பொய். நகைக்கடை விளம்பரங்களுக்கு டஸ்கி ஸ்கின் மாடல்கள்தான் தேவைப்படுறாங்க. விளம்பரத்தில் அம்மா ரோல் கிடைச்சாலும் நடிக்கணும். உங்க திறமை கேரக்டரில் இல்லை, அதை நீங்க எப்படி செய்றீங்க என்பதில்தான் இருக்கு. மாடலிங் துறையில் இருப்பவர்களுக்கு தேவையான முக்கிய அம்சம்... ஆட்டிட்யூட். 10 விளம்பரத்துல வொர்க் பண்ணதும், ‘நான் ஒரு பெரிய மாடல்’னு நினைக்க ஆரம்பிச்சுட்டா, அங்கேயே நம்ம தோல்வி ஆரம்பமாகிடுச்சுன்னு அர்த்தம்.

முதல் விளம்பரத்தில் இருந்த பணிவு பெரிய மாடலான பின்னும் தலைக்கனமாக மாறாம அப்படியே இருந்துச்சுன்னா, நீங்க மாடல் மட்டுமில்ல... ஃப்ரெஷர்ஸுக்கு ரோல் மாடலும்கூட!’’

- என்கிறார் சிம்ப்ளி ஸ்வீட் பூர்த்தி! 

க.தனலட்சுமி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick