Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இயற்கை விவசாயி!

அக்ரிகல்ச்சர் 18 சாதனைப் பெண்கள்

காமினி கிரிதரன்... பாரம்பர்ய விவசாய முறைகளை நவீன தொழில்நுட்பங்கள் துணைகொண்டு முயற்சிக்கும்போது, விவசாயம் வருமானத்தை அள்ளித் தரும் அட்சயப்பாத்திரமாக மாறும் ஆனந்த ஆச்சர்யத்தை நிகழ்த்திக்காட்டி வருபவர். சிவகாசியைச் சேர்ந்த இவர், கன்னி முயற்சியிலேயே ஆண்டுக்கு 2 லட்சம் வருமானம் பார்த்த விவசாய வெற்றியாளர்! 

‘‘நான் பி.ஏ., ஆங்கில இலக்கியப் பட்டதாரி. சின்ன வயசுல இருந்தே வீட்டில் ரோஜா, மல்லின்னு பூச்செடிகளை வளர்ப்பேன். விவசாயம் பண்ண ஆசை. ஆனா... அப்பா டாக்டர், கணவருக்குப் பிரின்ட்டிங் பிரஸ் தொழில்னு இருந்த சூழலில் அதுக்கான வழி தெரியல. அப்போதான் `பசுமை விகடன்’ படிக்க ஆரம்பிச்சேன். என் விவசாய ஆசையை அது தூண்ட, மல்லி கிராமத்துல இருந்த எங்கள் சொந்த நிலத்தில் வேலையை ஆரம்பிச்சேன்.

வெறும் தரிசா இருந்த அந்த ஒன்பது ஏக்கர் நிலத்தில் விவசாயமெல்லாம் செய்ய முடியாதுனு எல்லோரும் அட்வைஸ் பண்ணினாங்க. அப்பதான் கிருஷ்ணன்கோவில் பக்கம் ஒரு விவசாயி, சம்பங்கி சாகுபடியில மாசம் 50 ஆயிரம் வருமானம் பாத்துட்டு இருக்காருன்னு `பசுமை விகடன்’ல படிச்சேன். உடனே அவரை சந்திச்சு விவரங்கள் சேகரிச்சதோட, சம்பங்கி சாகுபடியில் முன்னோடி விவசாயிகளான திண்டுக்கல் மருதமுத்து-வாசுகி தம்பதியையும் சந்திச்சேன்.  அவங்க கொடுத்த தைரியத்துல துணிஞ்சு ஒரு ஏக்கர்ல சம்பங்கி நடவு செஞ்சேன்.

அப்ப, இந்த இடத்துல கிணறு, கரன்ட் எதுவுமில்ல. ஒரு போர்வெல் போட்டு, ஜெனரேட்டரை வெச்சுத்தான் விவசாயத்தை தொடங்கினேன். ‘இந்த இடத்துல சம்பங்கி வராது’னு அக்கம்பக்க விவசாயிங்களும், சொட்டுநீர் அமைக்க வந்த ஆட்களும் சொன்னாங்க. ‘முறையா ஊட்டம் கொடுத்து, இயற்கை விவசாய தொழில்நுட்பங்களைக் கடைபிடிச்சா எந்த மண்ணிலும் விளைச்சல் எடுக்கலாம்’னு பலம் கொடுத்தார் மருதமுத்து அண்ணா. மாட்டு சாணம், கோமியம்னு பயன்படுத்தி இயற்கை விவசாயம் செஞ்சேன். வழக்கமா மூணு மாசத்துல பூவெடுக்கிற சம்பங்கி என் வயல்ல எட்டு மாசமாகியும் பூ எடுக்காம இருந்தப்போ, கொஞ்சம் சோர்வானேன். ஆனா, அடுத்த மாசமே பரவலா மொட்டு எடுக்க உற்சாகம் ஊத்தெடுக்க ஆரம்பிச்சிடுச்சு.கால் கிலோவுல ஆரம்பிச்சது, இப்ப அதிகபட்சம் 30 கிலோ வரைக்கும் மகசூல் கிடைக்குது. இந்த ஒரு வருஷத்துல நாலு டன் பூ மார்க்கெட்டுக்கு அனுப்பிருக்கேன். 2 லட்சத்து 40 ஆயிரம் வருமானமா கிடைச்சது. ரெண்டு ஏக்கர்ல மானாவாரியா குதிரைவாலி விதைச்சேன். எந்த ரசாயனமும் தெளிக்காம 500 கிலோ மகசூல் கிடைச்சது. வீட்டு உபயோகத்துக்காக கொஞ்ச இடத்துல உளுந்து விதைச்சேன், 10 கிலோ கிடைச்சது. தோட்டத்துல ஒரு குடும்பம் குடி வெச்சு, இன்னும் ரெண்டு போர், நாட்டுமாடுனு விவசாயியா வளர்ந்துட்டே இருக்கேன். எனக்கு ஆதரவாகவும், உதவியாகவும் இருக்கிற கணவருக்கு நன்றிகள்.

நான் ஒரு விவசாயின்னு சொல்லிக்கிறதுல கர்வப்படுறேன். விவசாயியா  இருக்கிறதோட சந்தோஷம் உணர்ந்து பார்த்தாதான் தெரியும்!’’

- ஆர்வம் தூண்டி அழைக்கிறார் காமினி கிரிதரன்.

 ஆர்.குமரேசன்   படம்:எம்.முத்துராஜ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
டிடெக்டிவ் லேடி!
சோஷியல் கலாட்டா!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”
Advertisement
[X] Close