சீஸன் ரெசிப்பி... செம தூள்!

றுத்தெடுக்கும் வெயில், எரிச்சலூட்டும் வியர்வை கசகப்பு எல்லாம் விலகி, குளிர்க்காற்று உடலைத் தழுவும் சுகானுபவ பருவக் காலத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். நாக்கின் சுவை நரம்புகள் அதிகமாக தூண்டப்படும் காலகட்டமும் இதுதான்! `கிரிஸ்பியா... `யம்மி’யா ஏதாவது செஞ்சு கொடு’ என்று குழந்தைகளும், `தொண்டைக்கு இதமா, வயித்துக்கு பதமா சூப்பர் சமையல் அயிட்டம் ரெடி பண்ணு’ என்று பெரியவர்களும் கோரிக்கை மனுக்களை இல்லத்தரசிகளிடம் குவிப்பார்கள். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி, குடும்ப வட்டத்தில் தன்னிகரற்ற தலைவியாக உலா வர உதவும் வகையில்... சுவையான ரொட்டி; மொறுமொறு பக்கோடா; புதுமையான `பேல்’,  புலாவ், `பாஜி’ என்று கலந்துகட்டி இங்கே வழங்குகிறார் சமையல்கலை நிபுணர் அ.சாரதா. இதையெல்லாம் செய்து பரிமாறி, பாராட்டு மழையில் நனைய நீங்கள் தயார்தானே..?!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்