மெகா பரிசுப் போட்டி!

18 பவுன் தங்கம்..!

ஹாய் வாசகிகளே...

வள் விகடன் 18-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி, உங்கள் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் விதம்விதமான 18 போட்டிகள் தொடர்ந்து 6 இதழ்களுக்கு அணி வகுக்கப்போகின்றன. கடந்த இதழில் முதல் 3 போட்டிகளுக்கான அறிவிப்பு வெளியானது. அடுத்த 3 போட்டிகள் இங்கே... பங்கெடுங்கள், பரிசை வெல்லுங்கள்.

போட்டிக்கான விதிமுறைகள்

து அதிர்ஷ்டப் போட்டியல்ல... திறமையாளர்களுக்கே பரிசுகள் வழங்கப்படும். ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது. ஒருவர் எத்தனை போட்டியில் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். போட்டி தொடர்பாக வேறு கடிதப் போக்குவரத்துத் தேவையில்லை. படைப்புகளைத் திருப்பி அனுப்ப இயலாது. எனவே, நகல் எடுத்துக் கொண்டு அனுப்பி வைக்கவும்.

போட்டி எண் 4

கிராஃப்ட் போட்டி

‘வால் ஹேங்கிங்’ இந்தத் தலைப்பில் ஜூட், க்வில்லிங், த்ரெட், ஸ்டோன்ஸ், க்ளே, வேஸ்ட் பொருட்கள்... இதுபோன்று ஏதாவது ஒரு கிராஃப்ட் மெட்டீரியலில் அழகிய வால் ஹேங்கிங்கை செய்து, உங்கள் மொபைலிலோ அல்லது கேமராவிலோ தெளிவாக படம் எடுத்து அனுப்பவும். நீங்கள்தான் செய்தீர்கள் என்பதை உறுதிபடுத்தும்விதமாக, நான்கு அல்லது ஐந்து செய்முறை விளக்கப்படங்களையும் சேர்த்தே அனுப்ப மறக்காதீர்கள். போட்டி முடியும் வரை உங்களுடைய படைப்பை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

போட்டி எண் 5

ஸ்லோகன் போட்டி

மிழ்க் குடும்பங்களின் தலைமகள் அவள் விகடனோடு, இளையமகளாக `அவள் 16' வடிவெடுத்து வந்திருக்கிறது. `அவள் 16’ இதழுக்குப் பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் ஸ்லோகனை யூத்ஃபுல்லாகவும்... கலர்ஃபுல்லாகவும் இரண்டு வரிகளுக்குள் எழுதி அனுப்புங்கள். 90035 55441 என்ற `அவள்16’-க் கான வாட்ஸ்அப் எண்ணிலும் அனுப்பலாம்.

போட்டி எண் 6

கார்டன் டு கிச்சன்

ங்கள் வீட்டுச் சமையலுக்கு... உங்கள் தோட்டம்/மாடியில் விளைந்த காய்கறிகளைத்தான் பயன்படுத்துகிறீர்களா? வாங்க ராசாத்திகளே! அந்தத் தோட்டத்தின் கதையை பலவித புகைப்படங்களோடு, எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். எத்தனை வகையான காய்கறிகள் வைத்திருக்கிறீர்கள், ஒரு மாதத்துக்கு எவ்வளவு விளையும் என்பது போன்ற தகவல்களையும் எழுதி அனுப்புங்கள்.

குறிப்பு: தோட்டம் என்பது மாடியிலோ, வீட்டைச் சுற்றியோ சின்ன அளவில் இருக்க வேண்டும். ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்பவர்கள்... ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ்!

உங்கள் படைப்புகளை, போட்டியின் தலைப்பைக் குறிப்பிட்டு, ‘அவள் விகடன்’, 757, அண்ணா சாலை, சென்னை-2 என்கிற முகவரிக்கு எழுதி அனுப்பவும். அதாவது, முகவரியில் முதல் வரியாக போட்டியின் தலைப்பு கண்டிப்பாக எழுதப்பட வேண்டும். மின்னஞ்சல் முகவரி: aval@vikatan.com

போட்டி 4, 5, 6 ஆகியவற்றுக்கான படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 24.11.2015. அதற்குப் பிறகு வரும் படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.


கடந்த இதழ் போட்டிகள்..!

கடந்த இதழில் வெளியான முதல் 3 போட்டிகள்...

1. ரங்கோலி போட்டி

‘தித்திக்கும் தீபாவளி’ என்கிற தலைப்பில் கலர் பொடிகளை உபயோகித்து நீங்கள் வரையும் ரங்கோலியை, உங்கள் மொபைல் அல்லது கேமராவில் படம் பிடித்து அனுப்பவும். நீங்கள்தான் வரைந்தீர்கள் என்பதை உறுதிபடுத்தும் புகைப்படங்களையும் அனுப்பவும். பேப்பரில் வரைந்து அனுப்பக்கூடாது.

2. பாட்டுப் போட்டி

உங்களுக்குப் பிடித்த ஒரு பாடலை (சினிமா அல்லது பக்தி பாடல்) பாடி, ஆடியோவாகவோ... வீடியோவாகவோ அனுப்புங்கள்.

3. புடவை கட்டும் போட்டி

குறைந்தபட்சம் 10 விதமாக புடவையைக் கட்டி (நீங்கள் கட்டிக்கொள்ளலாம் அல்லது மற்றவர்களுக்கும் கட்டிவிடலாம்) புகைப்படம் பிடித்து அனுப்புங்கள்.

மறந்துவிடாதீர்கள்... இந்த 3 போட்டிகளுக்கான படைப்புகளை வரும் 10.11.2015-க்குள் அனுப்ப வேண்டும். அதற்குப் பிறகு வரும் படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick