அன்பு உள்ளம்... ஆண்டவன் இல்லம்!

கோ.ராகவிஜயா, படம்: உ.கிரண்குமார்

பெண்களின் அன்புக்கும் அரவணைப்புக் கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு... சிறப்புப் பள்ளி ஆசிரியைகள். எல்லையற்ற பொறுமை, அளவில்லா அன்பு, சகிப்புத்தன்மை, கலையுணர்வு என்று கட்டமைந்த மனது அவர்களுடையது!

வெவ்வேறு வகையான உடல் மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்டு, சராசரி குழந்தை களைப் போல இல்லாமல் சிறப்பு கவனம் தேவைப்படும் இந்தக் குழந்தைகளுக்கு அதிக சிரத்தையோடு பாடம் சொல்லிக் கொடுத்து, அவர்களை இந்த சமுதாயத்துக்குள் வாழ அனுப்பி வைப்பது சுலபமான விஷயமல்ல. ஆனாலும், ஒரே ஒரு வார்த்தையைப் புரியவைக்க அதைப் பாடலாக, கவிதையாக, நடனமாக, ஓவியமாக, விளையாட்டாக, நாடகமாக குழந்தைகளுக்கு கடத்திச் செல்லும் அவர்களின் மெனக்கெடல், ஈடற்றது. இவர்கள், இக்குழந்தைகளின் இரண்டாம் தாய் என்பதை கண்கூடாக பார்க்க முடிந்தது, சென்னையில் சமீபத்தில் ‘அர்விந்த்’ அமைப்பு நடத்திய ‘ஆடுகளம் - 2015’ நிகழ்ச்சி. ஆட்டிஸம், டௌன் சிண்ட்ரோம் உட்பட பல்வேறு மனநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக, 11 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது ‘அர்விந்த்’ அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்