`ஜி.கே'... கண்மணி!

சிறையில் மலர்ந்த புத்தகங்கள்!

 பாலகங்காதர திலகர் ‘கீதை ரகசியம்’ என்ற நூலை சிறையில் எழுதினார்.

 ஜவஹர்லால் நேரு தன் சுயசரிதையை சிறையில் எழுதினார்.

 சிறுகதை மன்னன் எனப்படும் ‘ஓஹென்றி’ சிறையில்தான் சிறுகதைகளை எழுதத் தொடங்கினார்.

 சர்வாதிகாரியான ஹிட்லர் சிறையில் இருந்தபோதுதான் ‘மெயின் காம்ஃப்’ நூலை எழுதினார்.

வயது தடையில்லை!

 திருமுருக கிருபானந்த வாரியார் சமயச் சொற்பொழி வாற்றத் தொடங்கியபோது அவருக்கு  9 வயது.

 பாரதியார் பாடல்களை எழுதத் தொடங்கியபோது அவருக்கு 11 வயது.

 ஹிமாயூனுக்குப் பிறகு அவரது மகன் அக்பர் பட்டத்துக்கு வந்தபோது அவரது வயது 13.

 ஷேக்ஸ்பியரின் ‘மாக்பெத்’ நாடகத்தை வங்காள மொழியில் மொழிபெயர்த்தபோது ரவீந்திரநாத் தாகூருக்கு வயது 14.

தோல்வியைக் கண்டு துவளாதே..!

 இந்தியாவின் மீது படையெடுத்து தொடர் தோல்விகளை சந்தித்த கஜினி முகம்மது, 18-வது முறையில்தான் வெற்றி கண்டார்.

 ரைட் சகோதரர்கள், தொடர்ந்து முயற்சி செய்து, 144-வது முறையில் தான் விமானத்தைக் கண்டு பிடித்தனர்.

 805 முறை தோல்வி கண்டு இறுதியில் தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார விளக்கைக் கண்டுபிடித்தார்.

புதிர் கணக்கு!

ரவு நேரத்தின்போது ஒரு தவளை 16 அடி உயரமுடைய கிணற்றில் விழுந்துவிட்டது. கிணற்றில் இருந்து தவளை வெளியே வர முயற்சி செய்ய ஆரம்பித்தது. ஒரு நாள் முழுவதும் அந்தத் தவளை 4 அடி உயரத்துக்கு மேலே ஏறினால், இரவில் 3 அடி கீழே இறங்கிவிடும். அப்படியானால் தவளை கிணற்றை விட்டு வெளியே வர எத்தனை நாட்கள் ஆகும்?


விடை: 13 நாட்கள். தவளை 12 நாட்களில் 48 அடி தூரம் ஏறியிருக்கும். அதே சமயம் 12 நாட்களில் 36 அடி தூரம் கீழே சென்றிருக்கும். எனவே, 13-ம் நாளில் 4 அடி தூரம் ஏறி,  தவளை அந்த 16 அடி உயர கிணற்றை விட்டு வெளியேறி இருக்கும்.

விலங்குகளின் கர்ப்ப காலங்கள்!

 


 யானை – 21 மாதங்கள்

 ஒட்டகச்சிவிங்கி – 14 மாதங்கள்

 குதிரை – 330 நாட்கள்

 கரடி – 180 நாட்கள்

 குரங்கு – 163 நாட்கள்

 வெள்ளாடு – 151 நாட்கள்

 பன்றி – 120 நாட்கள்

 சிங்கம் – 108 நாட்கள்

 நாய் – 65 நாட்கள்

 கழுதைப்புலி – 62 நாட்கள்

 குழிமுயல் – 31 நாட்கள்

 எலி – 22 நாட்கள்.

ஜி.டி.நாயுடுவின் நேர்மை!

தொழில்நுட்ப மேதையான ஜி.டி.நாயுடு ஒருமுறை தனக்கு வேண்டிய ஒரு சிறுவனுடன் ரயிலில் பயணம் மேற்கொண்டபோது, தனக்கு ஒரு டிக்கெட்டும், சிறுவனுக்கு அரை டிக்கெட்டும் எடுத்திருந்தார். நள்ளிரவு ஒரு மணி சமயத்தில் டிக்கெட் பரிசோதகர் வந்து, பயணிகளிடம் டிக்கெட்டுகளை சோதனை செய்துகொண்டிருந்தார். அப்போது பரிசோதகரிடம், அரை டிக்கெட் ஒன்றை கொடுக்கும்படி கேட்டார் ஜி.டி.நாயுடு. ``உங்களிடம் டிக்கெட் சரியாகத்தானே இருக்கிறது...'' என பரிசோதகர் கேட்டபோது, ``நேற்று இரவோடு சிறுவனுக்கு அரை டிக்கெட் வயது முடிவடைந்து விட்டது. நானும் சிறுவனின் வயதை மறந்து, அரை டிக்கெட் எடுத்துவிட்டேன். எனவே, மீண்டும் அரை டிக்கெட் ஒன்றை கொடுங்கள்'' என்று கூறி, டிக்கெட் பெற்றுக்கொண்டார் ஜி.டி.நாயுடு.

கு.ஆனந்தராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick