ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

சு.சூர்யா கோமதி, படம்: மீ.நிவேதன்

பெண் நினைத்தால்... எதுவும் சாத்தியம்!

சென்னையைச் சேர்ந்த முன்னாள் பேராசிரியர் சரஸ்வதி நாகப்பன், தமிழகத்தின் மிகச்சிறந்த பட்டிமன்றப் பேச்சாளர்! 13 துறைகளில் பட்டம் பெற்ற பட்டதாரி!

‘‘என் 20 வயதில் காதல் திருமணம் செய்துகொண்டேன். அதனால் ஆரம்பத்தில் பெற்றோரின் எதிர்ப்பு, சமூக எதிர்ப்பு என்று வாழ்வில் பல முடக்கங்களை எதிர்கொண்டேன். ஆனாலும், விருப்பப்பட்டுத் தேர்ந்தெடுத்த வாழ்வை வெற்றிகரமாக வாழ்ந்துகாட்ட வேண்டும் என்ற உத்வேகம், என் நிலைமையை மாற்றியது. 21 வகையான ஓவியங்கள் கற்று, வரைந்து விற்று, வீட்டுத் தேவைகளையும், குழந்தைகளின் தேவைகளையும் பூர்த்தி செய்தேன். அந்த விசையில் தொடர்ந்து இயங்கி, பேராசிரியர் பணி பெற்றேன். பட்டங்கள் பல முடித்தேன்.

என் நிலையில் நான் ஸ்திரமானதும், சமுதாயத்தில் உள்ள மற்ற பெண்களின் நலனுக்காக யோசிக்க ஆரம்பித்தேன். எந்தப் பெண்ணும் வீட்டில் முடங்கக் கூடாது என்பதே என் விருப்பம். அதை முன்னிறுத்தியே என் பட்டிமன்றப் பேச்சுகள் அமைந்தன. என்னால் முடிந்தவரை பெண்கள் சார்ந்த பிரச்னைகளை சமூகத்தில் ஆழமாகப் பதிவு செய்தேன். அதேநேரம், குடும்பத்திலும் மனைவியாக, தாயாக என் கீ-ரோலை நேர்த்தியாகச் செய்தேன். என் வளர்ச்சியில் என் கணவருக்கும் பங்குண்டு. நான் துவளும் நேரத்தில் தோள் கொடுத்தவர் அவர்.

வறுமை, இரட்டை வேலைச் சுமை, உறவுச் சிக்கல்கள் என்று எந்தப் பிரச்னையையும் மீறி, ஒரு பெண் மனது வைத்தால், தன் குடும்பத்தை வெற்றிகரமாக வழிநடத்தலாம்!’’ என்று உத்வேகமும் உற்சாகமும் அளிக்கும் விதமாகப் பேசும் சரஸ்வதி நாகப்பன்...

 ஒரு பெண் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவை என்ன?

 குடும்ப உறவுகளை மேம்படுத்திக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

 வாழ்வில் போராட்டத்தை எதிர்கொள்வது எப்படி?

 ஆடைகள் விஷயத்தில் பெண்கள் கவனிக்க வேண்டியது என்ன?

 தன்னம்பிக்கையோடு எவ்வாறு செயல்படுவது?

போன்ற கேள்விகளுக்கு தன் அனுபவத்திலிருந்து ‘கலங்காதிரு மனமே’ குரல் வழி மூலமாக பயனுள்ள பதில்களை வழங்குகிறார்.

அக்டோபர் 13 முதல் 19 வரை 044 - 66802912* என்ற எண்ணில் அழையுங்கள்! * சாதாரண கட்டணம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick