பணம், உங்கள் பலம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சி.சரவணன்

இரண்டாவது வருமானத்துக்கு எளிதான வழிகாட்டி!

ம்மில் பலர் சம்பளத்தில் மட்டுமே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறோம். அதில் ஏதாவது சிக்கல் வந்தால் ஆடிப்போகி றோம். அதைத் தவிர்க்க இரண்டாவது வருமானம் என்று ஒன்று இருந்தால் நல்லது என்கிறார், உலகின் மிகப்பெரிய கோடீஸ் வரர்களில் ஒருவர் வாரன் பஃபெட். இவர் முதலீடு மூலம், குறிப்பாக பங்குச் சந்தை முதலீடு மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர். அவரின் அறிவுரைகளில் மிக முக்கியமானது... ‘‘ஒரு வருமானம்/சம்பளம் மட்டும் ஒருவருக்குப் போதாது. இரண்டாவது வருமானம் வரும் விதமாக ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்!”

இரண்டாவது வருமானம் என்றவுடன், ஒரு வேலையில் இருந்துகொண்டு சைடில் வேறு ஏதாவது வேலை பார்த்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதில்லை. சம்பளத்தில் மிச்சப்படுத்தி, முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை இரண்டாவது வருமானம் என வாரன் பஃபெட் குறிப்பிடுகிறார்.

பார்க்கும் வேலையில் திடீர் சிக்கல் ஏற்பட்டாலும் சில காலத்துக்கு உங்களின் முதலீடு மூலமான வருமானம் கைகொடுக்கும் விதமாக இருக்க வேண்டும். அதாவது, சம்பளம், முதலீட்டு வருமானம்... இதில் ஏதாவது ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று காப்பாற்றும் விதமாக இருக்க வேண்டும்.

இந்த இரண்டாவது வருமானமான, முதலீடு மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு எப்படித் திட்டமிடுவது என்று பார்ப்போம். இந்த இரண்டாவது வருமானம் என்பது பெரும்பாலும் பணி ஓய்வுக்குப் பிறகு பயன்படும்விதமாக இருப்பது நல்லது.  

இன்றைய தேதியில் ஒருவர் படிப்பு முடிந்து, வேலைக்குச் சேர்ந்து, கல்விக் கடன் உள்ளிட்ட கடன்கள், சில அத்தியாவசிய தேவைகளுக்கான செலவுகள் (குறிப்பாக, இன்ஷூரன்ஸ் பிரீமியம், அவசரக்கால நிதி, வாகனம் வாங்குதல்) எல்லாம் முடிந்து  30 வயதில், பணி ஓய்வுக்குப் பிறகான எதிர்காலத் தேவைக்கான முதலீட்டை ஆரம்பிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் 58-60 வயது வரை வேலை பார்க்கிறார் என்றால், அவர் பணி ஓய்வு பெறும்போது அவருக்கு கிடைத்த வருமானத்தில், சுமார் 50 சதவிகிதமாவது ஓய்வூதியம் மற்றும் முதலீடு மீதான வருமானமாக இருக்க வேண்டும்.

இந்த முதலீடு மூலமான இரண்டாவது வருமானத்துக்கான முதலீட்டை  பல்வேறு திட்டங்களில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும். அப்போதுதான் ஒரு திட்டம் எதிர்பார்த்த வருமானம் தரவில்லை என்றாலும், வேறு ஒரு திட்டம் வருமானம் கொடுத்து உங்களின் மூலதனத்துக்கு இழப்பு ஏற்படாமல் காப்பாற்றும்.

இதற்காக நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள், கடன் மியூச்சுவல் ஃபண்டுகள், ரியல் எஸ்டேட் (வீட்டு வாடகை வருமானம்), ஃபிக்ஸட் டெபாசிட் போன்றவற்றில் முதலீட்டை பிரித்து மேற்கொண்டு வரலாம்.

சிலருக்கு, குடும்பத்தில் பிள்ளைகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது அல்லது சம்பளம் குறைவாக இருப்பது  போன்ற காரணங்களால் இரண்டாவது வருமானத்துக்கு போதிய அளவுக்கு முதலீட்டை மேற்கொள்ள முடியாமல் போகும். அவர்கள் அதற்காக பெரிதாக கவலைப்பட தேவையில்லை. அவர்கள் ஏற்கெனவே சேர்த்து வைத்துள்ள தொகை மற்றும் பணி ஓய்வுபெறும்போது கிடைக்கும் பிஎஃப், கிராஜுவிட்டி தொகை போன்றவற்றை அதற்கான நிதியாக மாற்றிக்கொள்வது நல்லது. உதாரணத்துக்கு, ஒருவர் பணி  ஓய்வு பெறும்போது மாதம் ` 50,000 வாங்குகிறார் என்றால், அவருக்கு முதலீடு மூலம் ` 25,000 வருமானம் வந்திருக்க வேண்டும். அவர் ` 15,000 வருமானம்  வரும் அளவுக்குதான் முதலீடு செய்திருக்கிறார். இந்த நிலையில் பிஎஃப், கிராஜுவிட்டி தொகை மூலம் கிடைக்கும் தொகையை முதலீடு செய்வது மூலம் வருமானம் பெற முடியும். அப்போது அவரால் பணி ஓய்வுக்கு பிறகு அன்றாட செலவுகளை சுலபமாக செய்ய முடியும். அந்த வகையில், நினைவில்கொள்ளுங்கள் இரண்டாவது வருமானத்தை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick