மரங்களைப் பாதுகாக்கும் ‘பட்டாம்பூச்சி’!

டுத்த 100 நாட்களுக்கு நீங்கள் காட்டில் வசிக்க வேண்டும் என்றால் ஏற்பீர்களா? ஆனால், கிட்டத்தட்ட 740 நாட்கள் காட்டில் அல்ல, ஒரு மரத்தில் மட்டுமே வசித்தார் ஜுலியா என்ற அந்தப் பட்டாம்பூச்சிப் பெண். அதுவும் தனக்காக அல்ல, மரங்களுக்காக!

ஆந்திராவில் நடந்த செம்மரக் கொள்ளை யையும், செந்தமிழர் கொலையையும் மறந்திருக்கமாட்டோம். இந்தியாவில் மட்டு மல்ல, அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியக் காடுகளிலும் இந்தக் கொள்ளை நடந்தது, மிகப் பெரிய அளவில்! வெறும் 3% செம்மரங்கள் மட்டுமே மிச்சமிருந்த நிலையில், அதையும் அழிக்க நினைத்தது பேராசைக்காரர்களின் கோடரி. ‘பசிபிக் லம்பர்’ என்ற நிறுவனம்தான் அந்தக் கொடூர கோடரி... 1,000 வயதைக் கடந்த மரங்களைக் குறிவைத்துக் குத்தியது. பல வேடிக்கை மனிதர்களைப் போலல்லாமல், மிகவும் வித்தியாசமான ஒரு போராட்டத்தை தொடங்கியது அந்தப் பட்டாம்பூச்சி. 1997ம் வருடம், சுமார் 1,500 வயதுடைய ஒரு செம்மரத்தை தேர்ந்தெடுத்து, அதற்கு ‘லூனா’ என்று பெயரிட்டு, 738 நாட்கள் அந்த மரத்திலேயே தங்கி தன் போராட்டத்தை நடத்தினார், அப்போது 41 வயதான ஜூலியா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்