டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு; ` 100

 

வியல் செய்யும்போது தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றுடன் ஊறவைத்த கசகசாவையும் சேர்த்து அரைத்து பயன்படுத்தினால், அவியல் திக்காக இருக்கும்; சுவையும் கூடும்.

- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்


ல்வா மிக்ஸ் பயன்படுத்தி அல்வா செய்யும்போது, அதிக அளவு  வேண்டுமென்றால், ஜவ்வரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, அந்த விழுதை மிக்ஸுடன் கலந்து செய்யலாம். நிறைய அல்வா கிடைப்பதுடன், கண்ணாடி போன்று பளபளப்பாக இருக்கும்.

- ஹெச்.ராஜேஸ்வரி, மாங்காடு


ரு கைப்பிடி கொண்டைக்கடலையை சிவக்க வறுத்து, முதல் நாளே தண்ணீரில் ஊறவிடவும். மறுநாள் கொஞ்சம் உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூளை தாளித்து, கொண்டைக்கடலையுடன் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து, கடைந்த தயிருடன் கலந்து உப்பு சேர்த்தால், டேஸ்ட்டி தயிர்ப்பச்சடி தயார்!

- வி.பத்மாவதி, அரியலூர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick