குழந்தை சரிவர பால் குடிக்கிறதா?

கண்டுபிடிக்க சில வழிகள்!சென்ற இதழ் தொடர்ச்சி...

தாய்ப்பாலின் அவசியத்தை வலி யுறுத்தி சென்ற இதழில் இடம்பெற்ற ‘இன்னொரு பால் நிகராகுமோ?’ கட்டுரையில் தாய்ப்பாலூட்டும் பெண்களின் சதவிகிதம் குறைந்து வருவது குறித்து சமீபத்தில் வெளியான யுனிசெஃப் அறிக்கை, தாய்ப்பாலின் மகிமைகள், தாய்ப்பால் கொடுப்பதால் சேய்க்கு மட்டுமல்லாமல் தாய்க்கும் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள், பசும் பாலைவிட தாய்ப்பால் எந்தளவுக்குச் சிறந்தது என்பது குறித்த ஒப்பீட்டு அட்டவணை என, ராஜபாளையத்தைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் பிரேமலதா தந்த தகவல்களை விரிவாகப் பார்த்தோம். தாய்ப்பாலின் எல்லையில்லா சிறப்புகள் பற்றி, கட்டுரை தொடர்கிறது இந்த இதழிலும்..!

 

‘‘குழந்தை பிறந்ததும் உடனடியாக தாய்ப்பால் கொடுப்பது ஏன் முக்கியம் எனில்... குழந்தை பிறந்த முதல் 30 - 60 நிமிடம் வரை மிகவும் சுறுசுறுப்புடனும் விழிப்புடனும் இருக்கும். பால் சப்பும் ‘அனிச்சை’ செயல்பாடு (Sucking reflex) பிறந்த முதல் ஒரு மணி நேரத்தில் உச்ச நிலையில் இருக்கும். இது பூரணமாக தாய்ப்பால் ஊட்டுவதை வெற்றி பெறச் செய்கிறது. தோளோடு தோள் இணைந்து கிடைக்கும் தாயின் அரவணைப்பே குழந்தைக்குச் சிறந்த இன்குபேட்டர்!’’

- வலுவான காரணத்துடன் ஆரம்பித்தார் டாக்டர் பிரேமலதா.

சா.வடிவரசு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick