தகவல் தொழில்நுட்பத்துறை... டாப் டக்கர் வாய்ப்புகள்!

கவல் தொழில்நுட்பத்துறை (Department of Information Technology)...  தற்போது உலகையே தன் கைக்குள் வைத்திருக்கும் துறை. பல நாடுகளின் பொருளாதார ஏற்றத்துக்குக் காரணமான துறை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை விரும்பும் டிஜிட்டல் ஆச்சர்யங்களைத் தந்துகொண்டே இருக்கும் இந்தத் துறையில் உள்ள படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றிச் சொல்கிறார், தேனி, நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் அ.கோமதி.

விண்ணப்பம்

‘‘பன்னிரண்டாம் வகுப்பில் பயாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுகளில் படித்துத் தேர்வானவர்கள், இளங்கலை தகவல் தொழில்நுட்பப் படிப்பான பி.எஸ்ஸி., ஐ.டி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து முன்னணி பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளிலும் பரவலாக வழங்கப்படும் இந்தப் படிப்புக்கு, கடந்த பத்தாண்டுகளில் வரவேற்பு அதிகரித்தவண்ணம் இருக்கிறது.

மேற்படிப்பு

பி.எஸ்ஸி., ஐ.டி மட்டுமல்லாது, இளங்கலையில் பி.பி.ஏ, பி.சி.ஏ துறைகளில் பட்டம் பெற்றவர்களும், எம்.எஸ்ஸி., தகவல் தொழில்நுட்பவியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். பி.எஸ்ஸி., ஐ.டி மற்றும் பி.எஸ்ஸி., கம்ப்யூட்டர் சயின்ஸ் பயின்றவர்கள், எம்.சி.ஏ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

சிலபஸ்

கணினியின் செயல் முறையில் இருந்து, புரோகி ராமிங் லாங்குவேஜ், கணினி பயன்படும் துறைகள், தகவல் தொழில்நுட்பத்தில் கணினியின் பங்கு என கணினி உலகின் செயல்பாடுகளுக்கான பரந்த அறிவு புகட்டப்படும்.

வேலைவாய்ப்பு

இளநிலை, முதுநிலை தகவல் தொழில்நுட்பப் படிப்பு முடித்தவர்கள் புரோ கிராமர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், வெப் டெவலப்பர் என ஐ.டி நிறுவனங்களில் வேலைவாய்ப்புப் பெறலாம்.

இளநிலை, முதுநிலை படிப்புடன் சிறப்புக் கணினி பயிற்சி (Game developing, Animation, App development, Mobile programming, Web designing, Big data cloud Computing, Cryptology) முடித்து, கலைத்துறை மற்றும் மீடியாவில் வேலைவாய்ப்பு பெறலாம்.

இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்று பி.எட் முடித்து ஆசிரியர் பணி வாய்ப்பும் பெறலாம்.

தகவல் தொழில்நுட்பம்... தரும் நல்ல எதிர்காலம்!

ச.மோகனப்பிரியா, படங்கள்:வ.வினோத்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick