வழிகாட்டும் ஒலி!

திரைப்படக் கல்லூரிகள்... வெள்ளித்திரைக்கு வழி!

‘‘திரைத்துறையில் சாதிக்கணும் என்ற கனவோட ஒவ்வொரு நாளும் சென்னைக்குப் படையெடுக்கும் இளைஞர்கள் ஏராளம். வீட்டின் எதிர்ப்பை மீறி அப்படிக் கிளம்பி வந்த நான், 1982-ல் சென்னை எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில படிச்சு, தொடர் முயற்சிகளால திரையைத் தொட்டேன். இன்னிக்கு ஒரு நல்ல நடிகனா அறியப்படுவதில் சந்தோஷப்படுறேன்...’’

- உற்சாகமாகப் பேசும் நடிகர் ‘தலைவாசல்’ விஜய், திரைத்துறையில் பணிபுரிய விரும்பும் இளைஞர்களுக்கான வழிகாட்டல்களை இங்கே வழங்குகிறார்...

‘‘பிள்ளைகள் எந்தத் துறையில ஆர்வமா இருக்காங்கனு புரிஞ்சுக்கிட்டு, அதுக்கான திறமையும் அவங்களுக்கு இருந்தா, உரிய வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கிறது பெற்றோரின் கடமை. அப்படி ஒருவேளை அவங்களோட ஆசை சினிமாவா இருந்ததுனா, பள்ளிப்படிப்பு முடிஞ்சதும் அவங்களை திரைப்படக் கல்லூரிகளில் ஒப்படைங்க. சிறந்த திரைப் பிரபலங்கள் ஆசிரியர்களா இருக்கும் அந்தக் கல்லூரிகள், அவங்களுக்கு ஒரு நல்ல பிளாட்ஃபார்மா இருக்கும்.

திரைப்படக் கல்லூரியில் சேர்ந்த பிறகு, திறமையை வெளிப்படுத்துவதில்தான் மாணவர்களின் வெற்றிவாய்ப்புகள் அடங்கியிருக்கு.நடிப்பைத் தாண்டியும் இந்த மீடியத்தோட அத்தனை துறைகளையும் கத்துக்கோங்க. போட்டிகள் நிறைந்த இன்றைய சூழலில், மல்டி டாஸ்கிங் முக்கியம். சக நண்பர்கள் இணைந்து பணியாற்றுங்க. பிற்காலத்தில் ஒருவருக்கு ஒருவர் வாய்ப்பு தந்து உதவலாம்.

இணைய வெளி... இன்றைய இளைஞர்கள் தங்களோட திறமையை வெளிப்படுத்த, வாய்ப்பு கேட்க பெரிய வரப்பிரசாதம். செல்போன் போதும், படம் எடுக்க. யூடியூப் போதும், உங்க படைப்புகளை உலகத்தைப் பார்க்கவைக்க. பயன்படுத்திக்கோங்க. இந்த டெக்னலாஜிக்கல் வளர்ச்சி எல்லாம் சினிமாவுக்குள் வருவதை முன்னைவிட பல மடங்கு எளிமையாக்கியிருக்கு. ஆனா, அதைத் தக்கவெச்சுக்கிறதுலதான் திறமை அடங்கியிருக்கு.

திரைத்துறையில் வாய்ப்பு பெறவும், வெற்றி பெறவும் திறமை, அர்ப்பணிப்பு, விடாமுயற்சி... இதெல்லாத்தையும்விட இன்னொரு முக்கியமான விஷயம் தேவை. அது பொறுமை’’ எனும் ‘தலைவாசல்’ விஜய்...

நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு உள்ளிட்ட திரைத்துறையில் தங்களுக்கான பிரிவைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

திரைப்படக் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பினைப் பெறுவது எப்படி?

திரைப்படக் கல்லூரியில், திறமையை எப்படியெல்லாம் வெளிக்காட்டலாம்?

திரைப்படக் கல்லூரியில் படித்துக்கொண்டேவும், படித்து முடித்ததும், வாய்ப்புகளைப் பெறுவது எப்படி?

திரைப்படக் கல்லூரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளில் படித்துப் பயனடைவது எப்படி?

திரைப்படக் கல்லூரிகளில் படித்த சீனியர்களின் நட்பு மற்றும் திரைத் துறையினரின் நட்பினால் கிடைக்கப்பெறும் பலன்கள் என்ன?

பிரபலமான திரைநட்சத்திரமாக பிரகாசிப்பது எப்படி?

- இந்த தலைப்புகளில் மார்ச் 22 முதல் 28 வரை ‘வழிகாட்டும் ஒலி’ குரல் வழியில் பேசுகிறார். 044-66802912* என்ற எண்ணில் அழைத்து, சீனியர் ஆர்ட்டிஸ்ட் ‘தலைவாசல்’ விஜய்யின் ஆலோசனைகளைக் கேட்டுப் பயனடையுங்கள்!* சாதாரண கட்டணம்

கு.ஆனந்தராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick