கலங்காதிரு மனமே!

சினிமாவும் வாழ்வும்!

கைச்சுவை நடிகர் மதன் பாப், தனி மனித வாழ்வில் சினிமாவின் பாதிப்பு பற்றிப் பேசினார்...

‘‘மக்களுக்குக் கருத்துகளை கேளிக்கையுடன் அளிப்பதில் சினிமாவுக்கு நிகரான மீடியம் இல்லை. சினிமாவைப் பார்த்து மக்கள் மாறுகிறார்களா அல்லது மக்களுக்கு ஏற்ப சினிமா மாறுகிறதா என்பது விடை காண முடியாத கேள்வி. இன்றைய காலகட்டத்தில் சினிமாவும் ஒருவரது வாழ்வும் ஏதோ ஒரு புள்ளியில் இணைகிறது.

திரையில் நாம் காணும் விஷயங்கள் மென்மையாகவும், நம்பிக்கை தருவனவாகவும் இருந்தால் நமது மனம் சிலிர்க்கிறது. அதுவே சோகமான படங்களோ, வன்முறைக் காட்சிகளோ அவற்றுக்கான எதிரொலியை மனதில் ஏற்படுத்துகின்றன. அது மனித மனதின் இயல்பு. நீங்கள் படிக்கும் புத்தகத்தை வைத்து உங்களின் சுபாவத்தைச் சொல்லும் காலம் சென்று, நீங்கள் பார்க்கும் சினிமாவை வைத்து உங்களின் சுபாவத்தைக் கணிக்கும் நிலை வந்தாகிவிட்டது.

இந்த பலமான ஊடகம் நம் மனதுக்கு மகிழ்ச்சி, சிந்தையில் எழுச்சி, வியக்கத்தக்க தகவல்கள், கசிந்துருக காதல் என பலவும் அளிக்கிறது. திரையில் கொட்டப்படும் விஷயங்களில், நல்லனவற்றை மட்டும் எடுத்துக்கொள்வதைத் தீர்மானிப்பது அவரவரின் அறிவு’’ என்று சொல்லும் மதன் பாப், தமது பல்லாண்டு கால சினிமா மற்றும் வாழ்க்கை அனுபவத்தை முத்தான தலைப்புகளில் நம்மிடம் பகிர்ந்துகொள்ளவிருக்கிறார்...

உங்களுக்குள் ஒரு ஹீரோ உண்டு!

பிள்ளைகள் இறை சம்பந்தப்பட்ட படங்கள் பார்க்கட்டுமே!

நமது குறைகளை நிறையாகக் காணலாம்.

நம்மிடம் உள்ள தனித்துவம் கண்டறிவோம்.

ஃபேன்டஸி படங்கள் மன உறுதி தருமா?

சினிமாவில் நல்லது, கெட்டது... எப்படிப் பிரித்துப் பார்ப்பது?

வியக்கவைத்த ஒரு நடிகரின் தன்னம்பிக்கை பற்றிய குட்டிக்கதை கேட்கலாம்!

இந்தத் தலைப்புகளில், ‘கலங்காதிரு மனமே’ குரல் ஒலியில் மார்ச் 29 முதல் ஏப்ரல் 4 வரை பேசவிருக்கிறார். 044 - 66802912*  எண்ணில் அழைத்து, நகைச்சுவை நடிகர் மதன் பாப் சொல்லும் கருத்துகளைக் கேட்டு மகிழுங்கள்!

ச.சந்திரமௌலி, படங்கள்:மீ.நிவேதன்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick