சானிடைசர்... ஒளிந்திருக்கும் ஆபத்துகள்!

விழிப்பு உணர்வு

ணம் சம்பாதிப்பதை முன்வைத்து ஆரோக்கியத்துக்கு சவால்விடும் நிறைய பொருட்கள் சந்தையை ஆக்கிரமித்துள்ளன. அவற்றை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க அந்நிறுவனங்கள் கையில் எடுத்திருக்கும் சக்தி வாய்ந்த ஆயுதம்...  விளம்பரம்!  விளம்பரம் மட்டும் செய்துவிட்டால் போதும்... ஒரு பொருளின் மதிப்பு உயர்ந்துகொண்டே போகிறது. ஆனால், அந்த விளம்பரத்தின் உண்மைத்தன்மையை யாரும் இங்கு ஆராய்வதில்லை.

அந்த வகையிலான ஆபத்து புதைந்த விளம்பரங்களில் ஒன்றுதான்... ‘சானிடைசர்’ விளம்பரம்.

பள்ளி, வீடு, மற்ற இடங்கள் என்று விளையாடிவிட்டு வரும் குழந்தைகள், கைகழுவ சோப்பையோ... ஏன், தண்ணீரையோகூட பயன்படுத்த வேண்டாம். சானிடைசரை கைகளில் பூசிக்கொண்டால் போதும்... அப்படியே சாப்பிடச் செல்லலாம் என்ற அளவுக்கு விளம்பரம் செய்கிறார்கள்.

இந்த சானிடைசர் என்பது என்ன? மருத்துவமனைகளில் நோயாளிகளைத் தொட்டுப் பரிசோதனை செய்தபின்னர் மருத்துவர் கைகளில் ஒரு மருந்தைத் தடவிக் கொள்வாரே... அதுதான் சானிடைசர்.

சரி, கைகளில் இதைப் பூசிக்கொண்டால் கிருமிகள் சாகும். ஆனால், கையைக் கழுவாவிட்டால், குழந்தைகள் கைகளில் உள்ள அழுக்கு எங்கே போகும்? பதில் இல்லை.

இன்னொரு கேள்வி. இந்த சானிடைசரில் என்ன உட்பொருட்கள் அடங்கியுள்ளன?

95% ஈதைல் ஆல்கஹால். அதாவது, ஒருவகை சாராயம்.

‘இது கிருமிகளைக் கொல்லத்தானே செய்கிறது, இதில் என்ன தவறு?’ என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம்.

அந்த பாட்டில்களின் பின்புறம் பார்த்தால், ஓர் உண்மை விளங்கும். ‘வெளிப்பூச்சுக்கு மட்டும், குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும். உட்கொண்டுவிட்டால் மருத்துவரை அணுகவும்.’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்