பெண்களை மிரட்டும் ரகசிய கேமராக்கள்!

விழிப்பு உணர்வு

ல்லூரி மாணவி அவர். இணையத்தில் உலாவிய ஆபாச வீடியோ காட்சி ஒன்றில் அவர் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்பட, அதிர்ச்சியானார். ‘நிச்சயம் நானாக இருக்காது’ என்ற நம்பிக்கையுடன் இணையத்தில் அந்த லிங்க்கைப் பார்த்தவர், உடைந்துபோனார். உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது அங்கே அவர் உடை மாற்றிய காட்சிதான் அது.

அது ஒரு பெண்கள் விடுதி. அங்கு இருந்த மூன்று பெண்களின் ஆபாசப் படம் இணையத்தில் தரவேற்றப் பட்டிருக்க, அந்தத் தகவலை அறிந்து அதிர்ந்து போனார்கள் மூவரும். குளியல் அறையில் அவர்கள் குளிக்கும் அந்தக் காட்சி படமாக்கப்பட்டது வேறு எங்கும் அல்ல... அவர்கள் தங்கியிருந்த லேடீஸ் ஹாஸ்டலின் குளியலறையில்தான்.

இந்த இரு சம்பவங்களும் நடந்தது கோவை பகுதியில். இவை வெறும் சாம்பிள்கள் தான். அலுவலகத்தின் வேலைக்கிடையே அதே அலுவலகத்தில் வேலை பார்க்கும் தன் காதலனை முத்தமிட அனுமதிக்கிறார் ஒரு பெண். பஸ்ஸில் செல்லும்போது யாரும் பார்க்க வாய்ப்பில்லை என்பதை உறுதிசெய்தபடி காதலன் தன்னைத் தொட அனுமதிக்கிறார் கல்லூரி மாணவி ஒருவர். வீட்டுக்கு வெளியே பாத்திரங்களைக் கழுவும்போதும், துணி களைத் துவைக்கும்போதும் விலகியிருக்கும் தன் உடைகளில் கவனம் செலுத்தாமல் இருக்கிறார் அந்த நடுத்தர வயதுப் பெண். `தோழியோடுதானே இருக்கிறோம்' என வெளிப்படையாக உடை மாற்றுகிறார் ஒரு பெண்.

இவை எல்லாம் கோவை பகுதியில் சம்பந்தப்பட்ட பெண்களுக்குத் தெரியாமல் பதிவு செய்யப்பட்டு இணையத்தில் தரவேற்றப்பட்ட வீடியோ காட்சிகள். மேலும், துணிக்கடைகளில் உடை மாற்றும் அறையில், மருத்துவமனைகளில் உடற்பரிசோதனைக் கூடத்தில் என எங்கும் பெண்கள் களவாணித்தனமாக படம்பிடிக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன.

சமீபமாக, ஹிடன் கேமராக்களில் (Hidden Camera) பெண்களின் அந்தரங்கங்கள் பதிவாவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காவல்துறையில் மாவட்டம்தோறும் சைபர் க்ரைம் பிரிவு துவங்கப்பட்டுள்ள நிலையில், நடக்கும் சம்பவங்களில் மிக சொற்பமானவை மட்டுமே புகாராகிறது. சைபர் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் உறுப்பினர் ரவிச்சந்திரனிடம் பேசினோம்.

‘‘மூணு விஷயங்களுக்காக பெண்களை இப்படி கேமராக்களை மறைத்துவைத்து ஆபாசமா படம் எடுக்கிறாங்க. ஒண்ணு, அந்தக் காட்சிகளைப் பார்க்க. ரெண்டு, நெட்ல அப்லோடு பண்ண. இது மாதிரியான வீடியோவை அப்லோடு செஞ்சா சில வெப்சைட்கள் பெருந்தொகையை கொடுக்கத் தயாரா இருக்காங்க. மூணாவது, பிளாக் மெயில் பண்ண’’ என்று ஆரம்பித்தார் ரவிச்சந்திரன்.

எங்கும்... எதிலும்!

``ஹிடன் கேமராக்கள் இப்போ சர்வ சாதாரணமாயிடுச்சு. பேனாவுல துவங்கின ரகசிய கேமரா, அப்புறம் பட்டன், ஷவர் பாத், பல்ப், ஸ்குரு, ஹூக்னு நீங்க நினைச்சுக்கூடப் பார்க்க முடியாத இடத்துல எல்லாம் வைக்கப்படுது. குளியலறை, உடை மாற்றும் அறை, கழிவறைனு பொதுவிடங்களில் படமாக்கப்படுற வீடியோக்கள், பெரும்பாலும் இணையதளத்தில் தரவேற்றத்தான் எடுக்கப்படுது. வீடு, உறவினர் வீடுகளில் எடுக்கப்படும் புகைப்படங்கள் நிச்சயமா நெருக்கமானவங்க மூலம்தான் எடுக்கப்படுது. சமீபத்துல பதிவான ஒரு புகார்ல, ஒரு பொண்ணை அவனோட சொந்தக்காரப் பையனே அந்தரங்கமா படமெடுத்து இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

இன்னொரு சம்பவம். அந்தப் பெண்ணோட நிர்வாண வீடியோவை அவளுக்கு அனுப்பின யாரோ ஒரு பையன், பணம் கேட்டு மிரட்டுறான். அந்தப் பெண், அவளோட தோழினு ரெண்டு பெண்கள் மட்டுமே தங்கியிருக்குற வீட்டுல யார் இந்தக் காட்சியை எடுத்திருப்பானு விசாரிச்சா, அது அவளோட தோழியேதான். தன்னோட பாய்ஃப்ரெண்டுக்கு பணம் தேவைப்பட, அவன்கிட்ட அந்த வீடியோவைக் கொடுத்து மிரட்டி பணம் வாங்கச் சொல்லியிருக்கா.

அதனால பெண்கள், ரெண்டு மடங்கு கவனமா இருக்கணும். தனிமையில் இருந்தாலுமேகூட, உடை மாற்றும்போதும் குளிக்கும்போதும் ஒருமுறை சுற்றுப்புறத்தை உன்னிப்பா பாருங்க. அங்க இருக்கிற ஒரு கொக்கியிலகூட கேமரா இருக்க வாய்ப்பிருக்கு. லைட், ஃபேன், பூந்தொட்டினு எந்தப் பொருள் மேல சந்தேகம் வந்தாலும் முதல்ல அதை டவலால மூடிடுங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்